கோவையில் குடியிருப்புக்குள் புகுந்த 2 பாம்புகள் மீட்பு

பாம்பு பீடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவையில் குடியிருப்புக்குள் புகுந்த 2 பாம்புகள் மீட்பு
Published on

கோவை,

கோவை 100 அடி ரோடு, 9-வது வீதியில் உள்ள சுப்ரமணி என்பவர் வீட்டின் தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீள சாரை பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுபற்றி பாம்பு பீடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து, பெட்டியில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இதேபோல், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும், பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார்.

பிடிபட்ட 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் பாம்புகளை மீட்டு மதுக்கரை வனப்பகுதியில் விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com