என் மலர்
நீங்கள் தேடியது "The drunken"
- மாரிக்கண்ணன் டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தார்.
- பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் விம்மநாதபுரம் புது தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (வயது 25).
இவர் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மணல் சப்ளை கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாரிக்கண்ணன் ஊட்டிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மாரிக்கண்ணன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அவர் அங்கு நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் டிரைவரின் இருக்கையில் அமர்ந்து செல்பி எடுத்தார்.
இதனை பார்த்த டிரைவர் அவரை இறக்கி விட்டனர். அப்போது மாரிக்கண்ணன் டிரைவர் மற்றும் பொது மக்களிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






