மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 3-ந் தேதி கோவை வருகை

காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 3-ந் தேதி கோவை வருகை
Published on

கோவை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை வருகிறார். கோவை கொடிசியா அரங்கத்தில் கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் சார்பில் கடன் திட்ட முகாம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து பிற்பகலில் அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com