என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People who are unable"

    • சீறிப்பாய்ந்து வரும் வாகனங்களால் சாலையை கடக்க முயலும் பாதசாரிகளை அச்சப்படுகின்றனர்.
    • சிங்காநல்லூர் சந்திப்பில் விபத்து ஏற்படாமல் சாலையை கடக்க போலீசார் வழிகாட்ட வேண்டும்

    குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூரில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் சிங்காநல்லூர் பகுதி எப்போதும் பரபர ப்பாக காணப்படும். வாக னங்களும் அதிகளவில் சென்று கொண்டிருக்கும்.இந்த நிலையில் கோவை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகைகளில், அதிகப்படியான சிக்னல்களில் ரவுண்டான முறை போக்கு வரத்து போலீசாரால் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் தற்போது கோவை மாநகரில் அதி கப்படியான சிக்னல்களில் போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் தங்கு தடை என்று சென்று வருகிறது. அதேபோன்று சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் பகுதியிலும் ரவுண்டானா முறை அமல்படுத்தப்பட்டது.

    இதனால் அப்பகுதி போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கிறது.

    அதே சமயம் இடைவெளி இன்றி வரிசையாக வாகனங்கள் வந்து கொண்டி ருப்பதால், பொதுமக்கள் சாலையின் இடதுபுறம் இருந்து வலது புறமும், வலது புறம் இருந்து இடது புறமும் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து நிற்கும் நிலையை காண முடிகிறது.

    ஒரு சில பாதசாரிகள் பொறுமை இழந்து, சாலையில் வாகனங்கள் வருவதை பொருட்படு த்தாமல் ஓடி சென்று கடக்க முற்படுகின்றனர். அந்த சமயங்களில் விபத்துக்களும் நிகழ வாய்ப்புகள் உள்ளது.

    இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகர் முழுவதும் சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.ஆனால் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், ஆங்காங்கே சிக்னல்களை அகற்றி, ரவுண்டானா முறை அமுல்படுத்தப்பட்டது. இது வரவேற்க கூடியது தான்.

    இருந்த போதிலும், சாலையை கடக்கும் பொதுமக்களின் நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. ஏனெனில் சிக்னல் ஏதும் இன்றி, தங்கு தடையின்றி வேகமாக சீறிப்பாய்ந்து வரும் வாகனங்கள், சாலையை கடக்க முயலும் பாதசாரிகளை அச்சப்படுத்துவது மட்டுமின்றி நீண்ட நேரம் காக்க வைக்கவும் செய்கிறது.

    அதுவும் காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே இது போன்ற பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நின்று கொண்டு, பாதசாரிகளுக்கு சாலையை கடப்பதற்கு வழிவகை செய்தால் பேருதவியாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளையும் தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×