என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்து இருந்தோம்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கோரிக்கைக்காகவே வந்தோம்.

    கோவை,

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? என்பது குறித்து பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்து இருந்தோம். அந்த மனுவை மீண்டும் வலியுறுத்து வதற்காகவே வந்தோம். மனு கொடுத்து நிதி அமைச்சரை சந்தித்தோம். வேறு எந்த அரசியல் காரணங்களும் கிடையாது.

    மாநில அரசிடம் பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசிடம் வலியுறுத்தியும் வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இங்கு வந்தோம். கூட்டணி குறித்த எல்லாம் பேசவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை மட்டுமே பேசினோம். கூட்டணி குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். நாங்கள் அது தொடர்பாக வரவில்லை. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்படுவோம்.

    விவசாயிகள் பிரச்சினைக்காகவே வந்தோம். இது அரசியல் ரீதியான சந்திப்பை கிடையாது. கூட்டணிக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தமில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கோரிக்கைக்காகவே வந்தோம். அரசியல் காரண காரியங்கள் எதுவுமே கிடையாது.

    எங்களுக்கு ஒரே அம்மா புரட்சித்தலைவி தான். மத்திய நிதி அமைச்சரை மரியாதை நிமித்தமாக அம்மா என்றோம். அம்மா வை (ஜெயலலிதாவை) யாரோடும் ஒப்பிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்தலாம்.
    • பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பேரூர்,

    பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்குப்பைகளை அள்ளுவதற்காக, சிறுதுளி மற்றும் பிரிக்கால் நிறுவனம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பேட்டரி வாகனங்களை வழங்கி உள்ளது.

    மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்த கூடிய இந்த பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறைந்தது 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் நடந்தது.

    இதில், சிறுதுளி தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய பேட்டரி வாகனத்தின் சாவியை, ஊராட்சித் தலைவர் என்.பி. சாந்திபிரசாத் மற்றும் அன்னதான சேவகர் வி. பிரசாத் ஆகியோரிடம் வழங்கினர்.

    அப்போது, ஊராட்சி செயலர் மனோகர், தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • ஈஷா யோகா மையம் செல்வதற்காக நர்சும், குடும்பத்தினரும் காத்து நின்றனர்.
    • வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    ஐதராபாத் ஹஸ்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு நேற்று அவர்கள் கோவை வந்தனர். கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையம் செல்வதற்காக நர்சும், குடும்பத்தினரும் காத்து நின்றனர்.

    அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அங்கு வந்தார். பஸ்சுக்கு காத்திருந்த நர்சின் அருகில் சென்ற அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சு, அந்த நபரை கண்டித்து சத்தம் போட்டார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினரும், அங்கு நின்ற பயணிகளும் அந்த நபரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை காட்டூர் போலீஸ்நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 40) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஆனைமலை, காரமடை ஒன்றியங்களில் தலா 18.5 மி.மீ. பதிவானது.
    • கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை.

    கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஓராண்டில் 600 மில்லி மீட்டர் மழை பொழியும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 180 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளது.

    இந்தநிலையில் கோவை மாவட்ட வேளாண் துறையினர், ஒன்றியம் வாரியாக மழை அளவை கணக்கிடுகின்றனர்.

    கடந்த ஜூன் மாதம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 26 மி.மீ. பதிவாகி இருக்கிறது. மற்ற ஒன்றியங்களில், ஒரு மி.மீ., கூட பதிவாகவில்லை.

    ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக ஆனைமலை-146.7, கிணத்துக்கடவு-139, தொண்டாமுத்தூர்-108 மி.மீ., பதிவானது. ஆகஸ்டு மாதத்தில் அன்னூர் ஒன்றியத்தில்- 26.4 மி.மீ., காரமடையில்-13.5 மி.மீ., பதிவாகியது. மற்ற ஒன்றியங்களில் மழை பொழிவு இல்லை.

    கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஆனைமலை, காரமடை ஒன்றியங்களில் தலா 18.5 மி.மீ. பதிவானது. மற்ற ஒன்றியங்களில் சொல்லும் படியாக பெரிய அளவில் மழை இல்லை.

    தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், கோைவ மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேளாண் துறையினர் கூறுகையில் கோவை மாவட்டத்தில் சராசரியாக ஓராண்டுக்கு 600 மி.மீ., மழை காணப்படும். இந்த ஆண்டு இதுவரை மூன்றில் ஒரு பங்காக 180 மி.மீ., பதிவாகியிருக்கிறது. வடகிழக்கு பருவ மழை இன்னும் பெய்ய தொடங்கவில்லை என்றனர்.

    வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் அக்டோபர் 10-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்ைல. வெப்பம் அதிகரித்து வறட்சி அதிகரிக்கும். 11-ந் தேதிக்கு பின் இடியுடன் கூடிய பருவ மழை காணப்படும் என்றனர்.

    • இ-சேவை மையங்களுக்கு சென்று எந்த காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    • காரணங்கள் சரியானதாக இல்லாமல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்.

    கோவை,

    தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி கூறுகையில் தகுதியான அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நேற்று பொள்ளாச்சி வடக்கு ஆச்சிப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் மத்தியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதற்கட்டமாக தகுதியான மகளிருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. விண்ணப்பித்த ஒருசிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இ-சேைவ மையங்களில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

    இ-சேவை மையங்களுக்கு சென்று எந்த காரணங்களால் உங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை அந்த காரணங்கள் சரியானதாக இல்லாமல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். தகுதியான மகளிர் யாரும் எங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். தகுதியான அனைவருக்கும் இத்தொகை கிடைக்க அரசின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாபு கடந்த 30-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சாரதம்பாள் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 30-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய பாபு கதவை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராம நாராயணன் (40). இவர் குடும்பத்துடன் தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கைச்செயின், தங்க நாணயம் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர் அருகே உள்ள அல்லிக்காரன ்பாளை யத்தை சேர்ந்தவர் விஜய்பிர காஷ் (36). போட்டோ கிராபர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவைக்கு வந்து இருந்தார்.

    அப்போது இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் பணம் மற்றும் வெள்ளி பொரு ட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 3 வயது முதல் 65 வயது வரையிலான 48 நபர்கள் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.
    • பாரம்பரிய கலைகளை கற்பதால் மன அழுத்தம் குறைகிறது என மாணவ-மாணவிகள் கருத்து.

     கருமத்தம்பட்டி,

    தமிழரின் பாரம்பரியக்கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது.

    அழிந்துவரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழு கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளது.

    இதையொட்டி சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் கருமத்தம்பட்டி அடுத்த சோளக்காட்டு பாளையம் ஆதிவிநாயகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 48 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர். நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் கனகராஜ் கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.

    நாட்டு புறகலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து 6 மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருவாக்கி வருகிறோம் என்றார்.

    நடனமாடிய பெண்கள், மாணவ-மாணவிகள் கூறும் போது இது போன்ற பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் உள்ளது எனவும் அனைத்து தரப்பு மக்களும் இதனை கற்றுக் கொள்ள வேண்டும், இது எங்களுக்கு ஊக்கப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். 

    • கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையத்தில் நடைபெற்றது.
    • பாதுகாப்பு படை சீப் கமாண்டர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கருமத்தம்பட்டி,

    காந்தி ஜெயந்தியைெயாட்டி, நேற்று நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை பணி நடந்தது.

    அதன்படி கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    இதில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கிராம மக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக எல்லை பாதுகாப்பு படையினர் 5 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு நடந்து சென்று வழி நெடுகிலும் உள்ள முட்புதர்கள் மற்றும் காகிதங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் போட்டு குப்பைகளை அகற்றினர்.

    மேலும் பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த தூய்மை இயக்க பணியில் எல்லை பாதுகாப்பு படை சீப் கமாண்டர் கமல் கஹல்பி, டெப்டி கமெண்ட் ராத்தூர் விஷால் சர்மா, கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • காய்ச்சலுக்கு என்று தனிமையம் தொடங்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளதால், மருந்து, மாத்திரைகள் தாமதமாக வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    தினமும் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில், பருவ நிலை மாற்றம், மழைக்காலம் என்பதால் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரி த்துள்ளது.

    குறிப்பாக புற நோயாளி களில் 10 சதவீதம் பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருவது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என்று தனி மையம் தொடங்கப்பட்டு அங்கு காய்ச்சலுடன் வருபவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது,கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    காய்ச்சலுக்கு என்று தனிமையம் தொடங்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை, உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    கோவையை பொறுத்த வரை டெங்கு காய்சல் பாதிப்பு தற்போது வரை கட்டுக்குள் உள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளதால், மருந்து, மாத்திரைகள் தாமதமாக வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

    • 383-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டியில் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 383-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தேர்த்திருவிழாவை யொட்டி நாள்தோறும் பல்வேறு சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் நடை பெற்றது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுப்பிரார்த்தனை நேற்று காலை நடந்தது.

    அதை தொடர்ந்து மாலையில் புனித அன்னை ஜெபமாலை திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேர் திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்

    • கூட்டத்திற்கு தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளேபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுரேந்திரன், ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வெள்ளி குப்பம்பாளையம் முதல் பகத்தூர் வரை சாலை அமைத்தல், ஆ னைப்பள்ளி புதூர் கிராமத்தில் மேல்நி லைத் தொட்டி அமைத்தல், தங்கவேல் தோட்டம் முதல் மாகாளி தோட்டம் வரை சாலை அமைத்தல், அன்னூர் சாலையில் இருந்து குமரன் குன்று கோவில் வரை தார் சாலை அமைத்தல், வெள்ளிக்குப்பம் பாளையம் காலனியில் காங்கிரீட் சாலை அமைத்தல், சிறுமுகை சக்தி சாலையில் இருந்து அம்பாள் பள்ளி வரை தார் சாலை அமைத்தல், சென்னம்பாளையம் ஏழு எருமை பள்ளம், பெள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் பகுதியில் தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீர் முறையாக வழங்க வேண்டும், தெருவிளக்கு அமைத்தல், விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • கார்த்திக் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக சென்றார்
    • கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் மகா லட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29).

    தனியார் ஏ.சி. நிறுவ னத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா. இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. எனவே கவுசிகா அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கார்த்திக் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்த னர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து இதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும் பிய கார்த்திக் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கோட்டூர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    ×