search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவு -விவசாயிகள் கவலை
    X

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவு -விவசாயிகள் கவலை

    • கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஆனைமலை, காரமடை ஒன்றியங்களில் தலா 18.5 மி.மீ. பதிவானது.
    • கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை.

    கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஓராண்டில் 600 மில்லி மீட்டர் மழை பொழியும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 180 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளது.

    இந்தநிலையில் கோவை மாவட்ட வேளாண் துறையினர், ஒன்றியம் வாரியாக மழை அளவை கணக்கிடுகின்றனர்.

    கடந்த ஜூன் மாதம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 26 மி.மீ. பதிவாகி இருக்கிறது. மற்ற ஒன்றியங்களில், ஒரு மி.மீ., கூட பதிவாகவில்லை.

    ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக ஆனைமலை-146.7, கிணத்துக்கடவு-139, தொண்டாமுத்தூர்-108 மி.மீ., பதிவானது. ஆகஸ்டு மாதத்தில் அன்னூர் ஒன்றியத்தில்- 26.4 மி.மீ., காரமடையில்-13.5 மி.மீ., பதிவாகியது. மற்ற ஒன்றியங்களில் மழை பொழிவு இல்லை.

    கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஆனைமலை, காரமடை ஒன்றியங்களில் தலா 18.5 மி.மீ. பதிவானது. மற்ற ஒன்றியங்களில் சொல்லும் படியாக பெரிய அளவில் மழை இல்லை.

    தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், கோைவ மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேளாண் துறையினர் கூறுகையில் கோவை மாவட்டத்தில் சராசரியாக ஓராண்டுக்கு 600 மி.மீ., மழை காணப்படும். இந்த ஆண்டு இதுவரை மூன்றில் ஒரு பங்காக 180 மி.மீ., பதிவாகியிருக்கிறது. வடகிழக்கு பருவ மழை இன்னும் பெய்ய தொடங்கவில்லை என்றனர்.

    வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் அக்டோபர் 10-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்ைல. வெப்பம் அதிகரித்து வறட்சி அதிகரிக்கும். 11-ந் தேதிக்கு பின் இடியுடன் கூடிய பருவ மழை காணப்படும் என்றனர்.

    Next Story
    ×