search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெள்ளேபாளையத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
    X

    பெள்ளேபாளையத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

    • கூட்டத்திற்கு தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளேபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுரேந்திரன், ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வெள்ளி குப்பம்பாளையம் முதல் பகத்தூர் வரை சாலை அமைத்தல், ஆ னைப்பள்ளி புதூர் கிராமத்தில் மேல்நி லைத் தொட்டி அமைத்தல், தங்கவேல் தோட்டம் முதல் மாகாளி தோட்டம் வரை சாலை அமைத்தல், அன்னூர் சாலையில் இருந்து குமரன் குன்று கோவில் வரை தார் சாலை அமைத்தல், வெள்ளிக்குப்பம் பாளையம் காலனியில் காங்கிரீட் சாலை அமைத்தல், சிறுமுகை சக்தி சாலையில் இருந்து அம்பாள் பள்ளி வரை தார் சாலை அமைத்தல், சென்னம்பாளையம் ஏழு எருமை பள்ளம், பெள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் பகுதியில் தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீர் முறையாக வழங்க வேண்டும், தெருவிளக்கு அமைத்தல், விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×