என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 percent of the fever patient"

    • காய்ச்சலுக்கு என்று தனிமையம் தொடங்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளதால், மருந்து, மாத்திரைகள் தாமதமாக வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    தினமும் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில், பருவ நிலை மாற்றம், மழைக்காலம் என்பதால் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரி த்துள்ளது.

    குறிப்பாக புற நோயாளி களில் 10 சதவீதம் பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருவது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என்று தனி மையம் தொடங்கப்பட்டு அங்கு காய்ச்சலுடன் வருபவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது,கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    காய்ச்சலுக்கு என்று தனிமையம் தொடங்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை, உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    கோவையை பொறுத்த வரை டெங்கு காய்சல் பாதிப்பு தற்போது வரை கட்டுக்குள் உள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளதால், மருந்து, மாத்திரைகள் தாமதமாக வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

    ×