என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth snatched jewelery"

    • மூதாட்டி வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்தார்.
    • சூலூர் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ஜெர்மன் கார்டனை சேர்ந்தவர கந்தசாமி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 74).

    சம்பவத்தன்று இவர் வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டு இரு ந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் 2 வாலிபர்கள் வந்த னர். அவர்கள் கண்இ மைக்கும் நேரத்தில் ஈஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர். அப்போது ஈஸ்வரி செயினை பிடித்தார். வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 3 பவுன் தங்க செயினுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோலம் போட்டு கொண்டு இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    ×