என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி- போட்டிகள்
- இஸ்ரோ விஞ்ஞானிகள், விண்வெளி ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள்
- விண்வெளி தொடர்பான கண்காட்சியையும் நுழைவு கட்டணம் எதுவுமின்றி கண்டுகளிக்கலாம்.
கோவை,
உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கோவையில் இயங்கி வரும் கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளன. வருகிற 5-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி வளா கத்தில் உள்ள முனைவர் ஆறுச்சாமி கலைய ரங்கத்தில் 5-ந் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மூதறிஞர்கள் மற்றும் விண்வெளி ஆய் வாளர்களின் சொற்பொ ழிவுகளும், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெற உள்ளன.
3 நாட்கள் நடக்கும் விண்வெளி தொடர்பான காணொலி காட்சிகளையும், விண்வெளி தொடர்பான கண்காட்சியையும் நுழைவு கட்டணம் எதுவுமின்றி கண்டுகளிக்கலாம். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
5 மற்றும் 6-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ ர்களுக்கான போட்டிகள் நுழைவுக்கட்டணம் இல்லாமல் நடைபெற உள்ளது. 5 -ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்க ளுக்கு வண்ணம் தீட்டல் போட்டியும், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வினாடி- வினா, எழுத்துப் போட்டியும் நடைபெற உள்ளது.
6-ந் தேதி காலை 10 மணி அளவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுவெராட்டி, வண்ணம் தீட்டல் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி மற்றும் விண்வெளி தொடர்பான மாதிரி, விண்வெளி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மாதிரிகளை உருவாக்கும் நேரடி மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளன.
6-ந் தேதி காலை 10.30 மணி முதல் 2 மணி அளவில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு ேபாட்டி நேரடி மாதிரி வடிவமைப்பு போட்டிகளும் நடைபெற உள்ளன. போட்டிகள் குறித்த விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல்களை www.kongunaducollege.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் நிறைவு விழா 7-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்கள் தெரிவித்து ள்ளனர்.






