என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மேகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 30). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கொத்திமங்கலம் பைபாஸ் சாலை அருகே மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பஸ் மேகநாதன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மேகநாதன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.
    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலராக செந்தில் வேலன் மற்றும் ஆய்வாளராக சோமசுந்தரம் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    இதில் சோமசுந்தரம் கடந்த 29ம் தேதி ஒரு நாளில் மட்டும் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உட்பட சுமார் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்ததாக கூறப்பட்டதுடன் இது குறித்த புகார்கள் போக்குவரத்து ஆணையருக்கு சென்றது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் உடனடியாக விடுவிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜ் தாம்பரம் வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் நான் ஒரு விண்ணப்பங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கிய ஆய்வாளர் சோமசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கே.கே நகர் வட்டார போக்குவரத்து அமலாக்க பிரிவில் இருந்த கார்த்திக் என்பவர் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் ஆம்பூர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது.
    • 500-பேருக்கு சில்வர் குடம் மற்றும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் ஆம்பூர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் சுஜாதா, ஆரணி மாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 500-பேருக்கு சில்வர் குடம் மற்றும் பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.

    மாவட்ட பிரிதிநிதி சி.எம்.கதிரவன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி கே.ப.ராஜன், ஒன்றிய துணை செயலாளர் அருள் தேவி, கெளதமன், கருணாகரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் கலைவாணி முனிராசு, ஒன்றிய அவை தலைவர் வி.ஜி.திருமலை, மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், ஜெயக்குமார், ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் கே.ஆர்.சி.ஜெ.ரத்தீஷ், ஏ.சத்யா, அறிவழகன், பிரவீன், ஒன்றிய மாணவர் அணி ராஜராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆப்பூர் குமாரசாமி, டில்லி, பாலாஜி, விஜயலட்சுமி துரைபாபு, நிர்மலா அசோகன், கவுன்சிலர்கள் நிந்துமதி திருமலை, மோகனா ஜீவானந்தம், தரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்தீஷ் நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.
    • மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் தூய்மை திருவிழா நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர் ஒன்றிணைந்து விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.

    தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் தேவையான சத்துள்ள உணவுகள் குறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுங்கச்சாவடி அருகே செல்லும்போது முன்னால் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
    • செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் அருகேயுள்ள செண்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 35). இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பரனூர் சுங்கச்சாவடி அருகே செல்லும்போது முன்னால் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் அப்துல் ரஹீமை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ரூ.24 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
    • ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    சென்னை ஆவடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 33), இவர் வண்டலூர் கேளம்பாக்கம் செல்லும் சாலையில் நல்லம்பாக்கம் தைலமரதோப்பு அருகே சாலை ஓரமாக மினி ஆட்டோவில் மெத்தை, தலையணை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அப்துல் ரஹீமை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ரூ.24 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அப்துல் ரஹீம் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து வேங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த கங்காதரன் (வயது 26), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 24 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 3.98 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது.

    நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுமார் ரூ.120 கோடி மதிப்பிலான தனியார் நிறுவனத்தின் நிலத்தை நந்திவரம்-கூடுவாஞ்சேரியை சேர்ந்த சங்கரன், ராமமூர்த்தி ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

    தாம்பரம் :

    தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப்பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான போலீசார் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் அவரது மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. இதற்கு அவரது தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து உள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக மனைவி லோகப்பிரியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். இதற்கு தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்று கூறிஉள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கணவரே கொலை செய்து விட்டு தற்கொலைநாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார்.
    • பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கமால். இவர் கல்பாக்கம் அடுத்த மெய்யூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் லவ்லி(வயது11). கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார். அப்போது அதன் கயிறு மாணவியின் கழுத்தை இறுக்கி அறுத்தது. இதில் பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லவ்லி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சதுரங்க பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர்கள் 3 பேரும் மாறி மாறி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
    • 3 பேரும் தனியாக வரும் நபர்களை குறிவைத்து செயின் பறிப்பது, செல்போன் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே ஆப்பூர் சாலையில் மறைமலைநகர் போலீசார் வாகன சோதனை ஈடுபடும்போது அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர்கள் 3 பேரும் மாறி மாறி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது தாம்பரம் பகுதியை சேர்ந்த தீனா என்கிற தினேஷ் (வயது 27), ஆவடியை சேர்ந்த எழிலரசன் (வயது 19), காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய பெருமாள் (வயது 22), என்பதும் இவர்கள் 3 பேரும் தனியாக வரும் நபர்களை குறிவைத்து செயின் பறிப்பது, செல்போன் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    • பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் நகர திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நகரக் கழக செயலாளர் மாவட்ட பொருளாளர் மாமல்லபுரம் வெ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கு புடவை, இட்லி குக்கர், தையல்மிஷின் என, 570 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர்கள் மோகன்குமார், பூபதி, சீனிவாசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.

    மாமல்லபுரம்:

    இ.சி.ஆர் சாலையில் இரவு நேரம் வேகத்தடைக்காக வைக்கப்படும் பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க அப்பகுதிகளில் வெளிச்சத்தை ஏற்படுத்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எல்கை துவங்கும் பகுதியான திருவிடந்தை இ.சி.ஆரில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளில் சீரியல் விளக்குகள் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்கள் நின்று நிதானமாக செல்கிறது.

    ×