search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food fair"

    • ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை,

    ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பாரம்பரிய குணமான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் சிறு தானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறும். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    அரசு துறைகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்பு களால் சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளது. இதில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.
    • மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் தூய்மை திருவிழா நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர் ஒன்றிணைந்து விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.

    தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் தேவையான சத்துள்ள உணவுகள் குறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சி நடைபெறுகிறது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சியினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் "ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் அனைவரும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கலியமூர்த்தி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு கண்காட்சியை நடத்தியது
    • இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கூறுகிறார்கள்.

    தூத்துக்குடி:

    75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு கண்காட்சியை நடத்தியது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    உணவு கண்காட்சியில் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கூறுகிறார்கள்.

    அவர்கள் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு சாப்பிட்டால் ரத்தசோகை சரியாகிவிடும். ஆகையால் மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகள், ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து டாக்டர் சிவராமன் கலந்து கொண்டு பேசினார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு போட்டிகளை செப் தாமு நடத்தினார். தமிழாசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கண்காட்சியில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் அதன் ஊட்டச்சத்து விவரங்களுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 75 வகையான தோசையும் விற்பனை செய்யப்பட்டன.

    முன்னதாக உகந்த உணவு குறித்த 7½கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நடைபயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் சுத்தமான, சுகாதாரமான, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவகங்ளில் பலகா ரங்கள் பொட்டலம் இடும் போது அச்சடிக்கப்பட்ட தாள்களில் பொட்டலம் இடுவதை தவிர்த்து, வாழை இலைகள் உள்ளிட்ட சுகாதாரமான பொருட்களில் பொட்டலமிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×