என் மலர்
செங்கல்பட்டு
வண்டலூர் தாலுகாவில் தொடர்மழையால் வீடுகளை சூழ்ந்து வெள்ளநீர் தேங்கி நிற்கிறது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வண்டலூர் தாலுகா நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் ஏரி போல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர், எம்.ஜி.நகர் போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கன்னிவாக்கம் சாந்தா தேவி நகரில் வீடுகளை சுற்றி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுவரை அந்த பகுதியில் எந்த அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதேபோல பெருமாட்டுநல்லூர் ராஜாஜி நகர், விமல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு செல்லும் சாலையில் பெருமாட்டுநல்லூர்-மூலக்கழனி அருகே சாலையின் நடுவே மழை நீர் ஆறுபோல் ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நேற்று அதிகாலை முதல் மாலை வரை பெய்த மழையால் சென்னை- செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மழைநீர் தேங்கியுள்ளதால் சிறுவர்கள் விளையாட முடியாமலும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 34 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 746 உயர்ந்தது. 480 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 260 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனகாபுத்தூரில் ஐடிஐ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், விசுவாசபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் இக்னியஸ்சுந்தர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி முத்துலெட்சுமியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர்பிரகாஷ் அஜய் (வயது 18) தந்தையுடன் வசித்து வந்தார்.
சென்னையில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ. முதலாமாண்டு படித்து வந்த அஜய், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஐ.டி.ஐ. திறக்காததால், அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். சமீப காலமாக அஜய், தனது தாயிடம் போனில் பேசி வந்தார்.
இதனை அவரது தந்தை கண்டித்து வந்தார். இதில் மனம் உடைந்த அஜய், நேற்று வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே வழிவிடுமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் லாரி உரிமையாளுக்கு சரமாரியாக அடி விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி மகேஷ் (வயது 35). இவர் சொந்தமாக 2 லாரிகளை வைத்து மணல், ஜல்லி வினியோகம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு திருநீர்மலை மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது 4 பேர் வழியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் வழிவிடுமாறு அந்தோணி மகேஷ் கூறினார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அந்தோணி மகேசை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் முகத்தில் காயமடைந்த அவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநீர்மலையை சேர்ந்த கிருபைநாதன் (22), சரவணன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறை வாக உள்ள ரூபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 744 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 575 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 ஆயிரத்து 688 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 361 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 679 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 762-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 65 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 263 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவிலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் களத்துமேடு முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவர் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் செல்லும் சாலையில் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அஜித் குமாரை வழி மறித்தது. அவர்களிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக அஜித்குமார் ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் அஜித்குமாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வடநெம்மேலி முதலை பண்ணையில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை வெளிநாட்டு ஆமையை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பல் கடத்தியதா? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள ஒரு பகுதியில் தேசிய அளவில் பாம்பு விஷம் எடுக்கும் பண்ணையும், மறுபுறம் இந்த பண்ணையின் முகப்பு வாயில் பகுதியில் கம்பி வேலி அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் அல்டாப்ரா என்ற அரிய வகையை சேர்ந்த 4 வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டும் வந்தன.
இந்த ஆமைகள் ஐஸ்லாந்து நாட்டு அருகில் உள்ள காலபாக்சஸ் தீவில் உள்ள நிலப்பரப்பு பகுதிகளில் வாழ்ந்து வருபவை ஆகும். 1½ மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த ஆமைகள் 225 கிலோ எடை வரை வளரும். 152 ஆண்டுகள் வரை வாழும் தன்மை உடையவை.
இந்த அரிய வகையை சேர்ந்த 4 ஆமைகளில் பெரிய ஆமை ஒன்று கடந்த சிலநாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திருடப்பட்டு விட்டது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள இந்த அரிய வகை ஆமையை திருடிச்சென்ற மர்ம கும்பல் பற்றி விசாரிக்க மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அதிக விலை மதிப்புள்ள இந்த ஆமையை திருடி சென்ற கும்பல் சர்வதேச அளவில் விலங்குகளை கடத்தி வணிகம் செய்யும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும், இங்கு பணிபுரியும் ஊழியர்களின் துணையுடன் யாராவது இதனை கடத்தி சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடத்தல் கும்பல் ஆமையை கடத்தும்போது அதன் வாயை கட்டி கடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த முதலை பண்ணையில் உள்ள முதலைகள், பாம்புகள், ராட்சத உடும்பு போன்றவற்றை கடத்தல் கும்பல் கடத்தும் வாய்ப்பு உள்ளதால் முதலை பண்ணையில் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பண்ணையில் எஞ்சியுள்ள 3 ஆமைகளும் ஊழியர்களின் கண்காணிப்பில் தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றன. கடத்தல் கும்பல் பற்றி ஏதாவது துப்பு கிடைக்கிறதா? என்று தனிப்படை போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ஒவ்வொரு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள புத்தேரியில் இரவோடு இரவாக குப்பைகள் கொட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி இரண்டு பகுதிகளாக புத்தேரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இதையடுத்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெற்கு பகுதியில் உள்ள ஏரி புனரமைக்கப்பட்டது. வடக்கு பகுதியில் உள்ள ஏரியை, பல்லாவரத்தை சேர்ந்த ‘பசுமை பெருக சுத்தம் செய்’ என்ற அமைப்பு, பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரி ஆழப்படுத்தியது.
சமீபத்தில் பெய்த மழையால் புத்தேரியின் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு பகுதியில் உள்ள புத்தேரியில், மர்ம கும்பல் ஒன்று இரவோடு இரவாக லாரியில் சுமார் 30 லோடு குப்பைகளை எடுத்து வந்து கொட்டியது.
நேற்று காலை அந்த வழியாக நடைபயிற்சி சென்ற பொதுமக்கள், ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதை அறிந்து அங்கு கூடினர். பின்னர் குப்பை கொட்டியதை கண்டித்தும், மர்மநபர்களை கைது செய்யக்கோரியும் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பல்லாவரம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏரிக்கு எதிரே, போலீஸ் உதவி மையம் உள்ளது. அப்படி இருந்தும் குப்பை கொட்டப்பட்டு உள்ளதால், போலீசார் துணையுடன் இச்செயல் நடந்ததாக நீர்நிலை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றுவதாக, நகராட்சி அதிகாரிகள் உறுதி கூறினர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ரஜினிகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் இயங்கி வந்தது. இதன் மூலம் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கிளை கால்நடை நிலையத்தை தமிழக அரசு கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தியது. தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரத்தினமங்கலம் கஜா என்கிற கஜேந்திரன், மண்டல கால்நடை இணை இயக்குனர் கலா, உதவி இயக்குனர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் புதிய கால்நடை மருந்தகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதில் தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் வண்டலூர் தாசில்தார் செந்தில், ஊனை லட்சுமணன், நெடுங்குன்றம் ரங்கன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கடமங்கலம் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.தேவதாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நல்ல மனிதர், அவர் உடல்நிலையை நல்லபடியாக பாத்து கொள்ளவேண்டும். அவர் தமிழகத்தின் சொத்து, தமிழகத்தில் மிக சிறந்த மனிதர்களிலே அவர் ஒருவர். எம்.ஜி.ஆர். அரசு அமைப்பது என்று அவர் சொன்னார். எம்.ஜி.ஆர். அரசாகவே நடந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அவர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அவர் எப்போதும் சொன்ன வார்த்தையை காப்பாற்ற கூடியவர். அவர் நீடூழி வாழ வேண்டும். ரஜினி ரசிகர்கள் விரும்பியதும் அதுவே. கட்சியை கடந்து எல்லோருடைய எண்ணமும் அதுவாகவே இருந்தது. அவர் ஏதோ ஒரு வகையில் வாய்ஸ் தர வேண்டும் என்று நினைத்தார். அந்த வாய்ஸ் எம்.ஜி.ஆர். ஆட்சி தொடருவதற்கான வாய்சாக இருக்க வேண்டும். அவர் ஆதரவு கரம் நீட்டினால் அது அ.தி.மு.க.வுக்கு மட்டுமே இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.

பெருங்களத்தூரில் பணம் வைத்து சூதாடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர், 1-வது தெருவில் வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில் அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இது தொடர்பாக வெங்கடேசன்(வயது 29), பொன்னுசாமி(56) உட்பட 15 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மற்றும் 15 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்ட கிளப் நடத்திய திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அனைவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வேங்கடமங்கலம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஊனை ரங்காநாதன், ரத்னமங்கலம் விஜயகுமார், மண்ணிவாக்கம் சண்முகம், ஒட்டேரி டி.குணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் வேங்கடமங்கலம் கிராமத்தில் இலவச பட்டா வழங்கப்படவில்லை, தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம் என்று தங்களது குறைகளை நேரடியாக எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். இதற்கு எம்.எல்.ஏ. மிக விரைவில் திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் வேலுமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நல்லம்பாக்கம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதனூர் கிளை செயலாளர் டி.தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்விழி தமிழ்அமுதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஆதனூர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் குளக்கரை அருகே நடந்த கூட்டத்தில் வரலட்சுமி மதுசூதன் எம்.எல்.ஏ., சேப்பாக்கம் பிரபாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதில் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி தி.மு.க. செயலாளர் ராஜன், ரத்திஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை-மாமல்லபுரம் சாலை கிழக்கு கடற்கரை சாலை என்பதால் 31-ந்தேதி மதியம் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள், சுற்றுலா தலங்கள், சாலையோர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மாமல்லபுரம்:
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து வருகிற 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்து உள்ளது. வழக்கமாக கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் புத்தாண்டு களைகட்டும்.
தற்போது தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனின் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் ஓட்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறியதாவது:-
வருகிற 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை-மாமல்லபுரம் சாலை கிழக்கு கடற்கரை சாலை என்பதால் 31-ந்தேதி மதியம் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள், சுற்றுலா தலங்கள், சாலையோர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.
முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை 5-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் அன்று இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. விதிகளை மீறும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது கொரோனா காலத்து 144 விதிமுறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவரேனும் ஆன்லைன் மூலம் விடுதியில் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்திருந்தால் 31-ந்தேதி இரவு 10 மணிக்குள் ஓட்டலுக்கு வந்துவிட வேண்டும். இதுபற்றி விடுதி ஊழியர்கள் இப்போதே தகவல் கொடுத்து விட வேண்டும்.