என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனை சாவடி
    X
    சோதனை சாவடி

    முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை

    சென்னை-மாமல்லபுரம் சாலை கிழக்கு கடற்கரை சாலை என்பதால் 31-ந்தேதி மதியம் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள், சுற்றுலா தலங்கள், சாலையோர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.
    மாமல்லபுரம்:

    கொரோனா அச்சுறுத்தலை அடுத்து வருகிற 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்து உள்ளது. வழக்கமாக கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் புத்தாண்டு களைகட்டும்.

    தற்போது தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனின் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் ஓட்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறியதாவது:-

    வருகிற 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை-மாமல்லபுரம் சாலை கிழக்கு கடற்கரை சாலை என்பதால் 31-ந்தேதி மதியம் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள், சுற்றுலா தலங்கள், சாலையோர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை 5-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் அன்று இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. விதிகளை மீறும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது கொரோனா காலத்து 144 விதிமுறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவரேனும் ஆன்லைன் மூலம் விடுதியில் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்திருந்தால் 31-ந்தேதி இரவு 10 மணிக்குள் ஓட்டலுக்கு வந்துவிட வேண்டும். இதுபற்றி விடுதி ஊழியர்கள் இப்போதே தகவல் கொடுத்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×