search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளநீர்"

    • ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டு, 1,600 ஆண்டுகள் பழமையானது.
    • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோவில் கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருமழபாடி:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டது. 1,600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குறித்த தகவல் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் நந்திய பெருமான் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அதன் கரையில் உள்ள இந்த கோவிலுக்குள் ஊற்று நீர் புகுந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் இதனால் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் இந்த கோவிலுக்கு தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில்,கோவிலின் உள்ளே தேங்கி உள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டும் என்று அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×