என் மலர்
செங்கல்பட்டு
- குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக செம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.
- கழிவுநீர் செம்பாக்கம் ஏரியில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில் ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக செம்பாக்கம் ஏிரயில் அதிக அளவு த்ணணீர் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக செம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.
இதனால் ஏரி தண்ணீர் மாசு அடைந்து அதன் நிறம் மாறி வருகிறது. இதனால் அப்பகுயை சுற்றி உள்ள நிலத்தடி நீரின் தன்மைமாறி வருவதாக அப்பகுித மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம், அஸ்தினாபுரம் உள்ள பகுதிகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் செம்பாக்கம் ஏரியி்ல கலந்து வருகிறது. இதனால் ஏரியின் தண்ணீர் அதிக அளவு மாசு அடைந்து வருகிறது.
மேலும் ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிப்புகளில் சுருங்கி வருகிறது. ஏற்கனவே சென்னையில் கூவம், அடையாறு ஆறுகள் அதன் தன்மையை இழந்து விட்டன. தற்போது புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளும் அதிக அளவில் மாசு அடைந்து வருகின்றன. ஏரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர் பகுதிகளை இணைக்கும் வகையிலான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை விரைந்து முடிக்க வேண்டும். கழிவுநீர் செம்பாக்கம் ஏரியில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
மண்ணிவாக்கம் சுவாமி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 25), தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போனது தெரிய வந்தது. இது குறித்து முருகன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போல ஊரப்பாக்கம் அருகே உள்ள அருங்கால் செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்சவேணி (29). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.12 ஆயிரம், குழந்தைகளின் வெள்ளி கொலுசு போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அம்சவேணி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பார்கோடை ஸ்கேன் செய்தால் சுற்றுலா இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
- புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா இடத்தில் மாமல்லபுரம் இடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்லும் முன் அப்பகுதி விபரங்களை ஆடியோ வழியாக அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிதாக பார்கோடு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. தொல்லியல்துறை மற்றும் சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் 'ஸ்டோரி டிரையல்ஸ் ஆடியோ டூர்' என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் புதிய பார்கோடு ஒன்றை உருவாக்கி ஐந்துரதம், கடற்கரை கோயில் பகுதியில் முதற்கட்டமாக அறிமுகம் செய்து ஒட்டி வைத்து உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் இந்த பார்கோடை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், போன்ற இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
இதனால் சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் உதவியின்றி புராதன சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் சுற்றுலா தலம் குறித்து முழுவதும் அறிந்து கொண்டு வேகமாக தங்களது பயணத்தை முடிக்க முடியும்.
இந்த புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்கள் குறித்து முழுமையாக சரியான தகவலை பெற முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- 6 வயது சிறுவன் தண்ணீர் பிடிக்க தந்தையுடன் சென்றான்.
- அப்போது செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன் பலியானான்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), லாரி டிரைவரான இவர் நேற்று மாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றார்.
தந்தை மணிகண்டன் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் கவனம் செலுத்திய நிலையில், விளையாடிக் கொண்டிருந்த மகன் திடீரென காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கை பார்த்தபோது அதில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்த தனது மகனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிநீர் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சதுரங்கபட்டினம் காவல் நிலையம் அருகே பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று திடீரென காரின் மீது மோதியது.
- காரை ஓட்டிய கிருஷ்ணன் சாதுர்யமாக காரை நிறுத்தியதால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மாருதி கார் ஒன்று 3 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சதுரங்கபட்டினம் காவல் நிலையம் அருகே பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று திடீரென காரின் பின்புறம் மோதியது.
இதில் கார் நிலைகுலைந்து ஓடியது. காரை ஓட்டிய கிருஷ்ணன் சாதுர்யமாக விபத்து ஏற்படாமல் காரை நிறுத்தினார். இதனால் காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதன்பின் அரசு பஸ்ஸை நிறுத்தி மோதியது எப்படி என காரணம் கேட்டதற்கு, அரசு பேருந்து டிரைவர் பிரேக் பெயிலியர் என பொறுப்பின்றி பதிலளித்தார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த சதுரங்கபட்டினம் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
- வகுப்பறை கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே திறந்து வைத்தார்.
- முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 95 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதேபோல் கூவத்தூர் அடுத்த கடலூர் மீனவர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 55 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது.
இந்த கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் சுபாமூர்த்தி, வாசுதேவன், ஜெகன், சின்ன கோவிந்தன், கருணா மூர்த்தி, ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- பிரியா தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
- மனமுடைந்த பிரியா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு:
திருக்கழுக்குன்றம் கருங்குழி ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 26). சென்னையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் பிரியாவுடைய தாய் மாமனை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தினர் கூறிவந்ததாக கூறப்படுகிறது. பிரியா தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் குடும்பத்தினர் பிரியாவிடம் தாய்மாமனை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவந்தனர். இதனால் மனமுடைந்த பிரியா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார்.
- பாலாஜி விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை காற்று பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் டயரை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி அதை ஓட்டிச் சென்றார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார். ஆம்புலன்சை திருடி சென்ற நபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், விசாரணை செய்ததில் தனது பெயர் பாலாஜி என்கிற விக்கி என்றும் மதுராந்தகம் அருகே உள்ள திருவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார். பின்னர் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல் முழுவதும் பலத்த காய தழும்புகள் உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார்.
- ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் கொலைக்கு உடந்தையாக இருந்தான்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அருகே, வாயலூர் கிராமம் அருகில் உள்ள தடுப்பணையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூவத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இறந்து போன பெண்ணின் பெயர் சாந்தி(50) நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர். கணவரை இழந்த சாந்திக்கு மஞ்சு( 33) என்ற மகள் உள்ளார். இவரது கணவர் ஆனந்தன் (37) இவர் மரக்காணம் அருகே உள்ள புதுபாக்கம் பகுதியை சேர்ந்தவர்.
சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சு மரக்காணம் -புதுபாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஆனந்தனை விட்டுபிரிந்து சென்று விட்டார். சாந்தி தனது மகள் மஞ்சு, ஆனந்தனுடன் வாழாத நிலையில் மாமியார் சாந்தி தனது மகள் பெயரில் உள்ள சொத்தை கேட்டு ஆனந்திடம் பலமுறை கேட்டார்.
அதற்கு ஆனந்தன் சொத்தை கேட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் சாந்தி தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றார். அதனை அறிந்த மருமகன் ஆனந்தன் துக்க நிகழ்ச்சியில் மாமியார் சாந்தியிடம் ஊரில் உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களை பார்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
ஒரு முறை வந்து உங்கள் பேரபிள்ளைகளை பார்த்து விட்டு செல்லுங்கள் என நைசாக பேசினார். பேரப்பிள்ளைகள் மீது பாசம் கொண்டு சாந்தியும் பார்க்க சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் ஆனந்தன் மாமியார் சாந்தியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கி கொலை செய்தார். இதற்கு ஆனந்தனின் அக்காள் மகனான 15 வயது சிறுவன் உடந்தையாக இருந்தான். பின்னர் காரில் ஏற்றி வாயலூர் தடுப்பனை அருகே உடலை வீசி விட்டு சென்று விட்டனர். பின்னர் மறுநாள் சாந்தியின் விட்டிற்கு சென்று சாந்தி வளர்த்து வந்த ஆடு, மற்றும் மாடுகளை ஏற்றி வந்து விட்டனர்.
நத்தேடு கிராமமக்கள் சிலர் சந்தேகப்பட்டு, கூவத்தூர் போலீசாரிடம் தெரிவித்த தகவலின் படி மருமகன் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரி மகன் 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் விசாரித்ததில் மாமியாரை கொலை செய்ததை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். பின்னர் ஆனந்தனை செங்கல்பட்டு சிறையிலும், சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.
- சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
- 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
மாமல்லபுரம்:
ஜி.20 மாநாட்டிற்கு சென்னை வரும் பிரதிநிதிகள் சிலர் ஜன.30-31 தேதிகளில் சென்னையில் இருந்து கல்பாக்கம் வழியாக புதுச்சேரி ஆரோவில் செல்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்த 3கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மாமல்லபுரம்-கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மழையால் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கல்பாக்கம் புதுப்பட்டினம் வரும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினர். 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சாலை அமைக்கும் பணி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
- வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
- செங்கை தமிழரசன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் தொடர்புடையவர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பனையூர் பாபு எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் ஆதவன், ராஜ்குமார், தேவ அருட்பிரகாசம், அன்புச்செல்வன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், தென்னவன், சாந்தன், ரவீந்திரன், ராஜ்குமார், ஜனா, வெங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருக்கழுக்குன்றம் அருகே குன்னப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம்.
- மதுக்கடை அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே குன்னப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 46) இவர் திருக்கழுக்குன்றம் வடக்கு பட்டு பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுரங்கம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






