என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே குடியிருப்பு கழிவு நீரால் செம்பாக்கம் ஏரி மாசடைந்தது
    X

    தாம்பரம் அருகே குடியிருப்பு கழிவு நீரால் செம்பாக்கம் ஏரி மாசடைந்தது

    • குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக செம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.
    • கழிவுநீர் செம்பாக்கம் ஏரியில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில் ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக செம்பாக்கம் ஏிரயில் அதிக அளவு த்ணணீர் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக செம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.

    இதனால் ஏரி தண்ணீர் மாசு அடைந்து அதன் நிறம் மாறி வருகிறது. இதனால் அப்பகுயை சுற்றி உள்ள நிலத்தடி நீரின் தன்மைமாறி வருவதாக அப்பகுித மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம், அஸ்தினாபுரம் உள்ள பகுதிகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் செம்பாக்கம் ஏரியி்ல கலந்து வருகிறது. இதனால் ஏரியின் தண்ணீர் அதிக அளவு மாசு அடைந்து வருகிறது.

    மேலும் ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிப்புகளில் சுருங்கி வருகிறது. ஏற்கனவே சென்னையில் கூவம், அடையாறு ஆறுகள் அதன் தன்மையை இழந்து விட்டன. தற்போது புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளும் அதிக அளவில் மாசு அடைந்து வருகின்றன. ஏரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர் பகுதிகளை இணைக்கும் வகையிலான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை விரைந்து முடிக்க வேண்டும். கழிவுநீர் செம்பாக்கம் ஏரியில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×