என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் சுந்நரருக்கு குருபூஜை விழா
- 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை கழுமலைநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் சுந்தரர் மூர்த்தி குரு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திருவாசகம் பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.
- கீழராயம்புரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
- சாலையின் நடுவே சாக்கடை ஓடும் அவலம்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தெற்கு தெருவில் உள்ள கிராம மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மண் சாலையில் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே உள்ள குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தேங்கி நடக்க முடியாத நிலையில் சாக்கடையில் நடந்து செல்லும் அவநிலையில் இருக்கின்றனர்.இதனால் அப்பகுதி பொதுமக்களும், மாணவ, மாணவிகளும், பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே தெற்கு தெருவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்லாத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- அம்மனுக்கு ௧௬ வகையான திரவிய பொடிகளில் சிறப்பு அபிஷேகம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக திருவிழாவில் அம்மனுக்கு பால். சந்தனம். திரவிய பொடி. உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கல்லாத்தூர் வண்ணான் ஏரியிலிருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. வாண வேடிக்கையுடன், மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை சென்றடைந்தது. அதன் பின்னர் 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வன், ஊர் நாட்டார்கள் குமார், பழனிச்சாமி, இளையராஜா ராஜேந்திரன், பொன்வடிவேல், சுந்தரம் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஒரு மாத காலமாக பூமுடையான் குடியாடு மகாபாரத ஆசிரியர் கொளஞ்சிநாதன் தலைமையில் மகாபாரதம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. மேலும் 18 மண்டகப் பிடிகள் தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
- நகை மதிப்பீட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர்.
- போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
அரியலூர்:
அரியலூரில், அரியலூர்-திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 39) மற்றும் அரியலூர் அஸ்வினாபுரம் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி மணிமாறன் (39), பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் (35) ஆகிய 3 பேரும் நகை அடமானம் வைக்க இந்த வங்கிக்கு வந்தனர்.
மணிகண்டனும், மணிமாறனும் வங்கிக்குள் சென்று நகை மதிப்பீ ட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர். ரமேஷ் வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து மதிப்பீ ட்டாளர் அவர்கள் கொடுத்த நகைகளின் உண்மை தன்மையை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அது போலி நகை என்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேலாளரிடம் உங்களுக்கு பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறிவிட்டு அந்த போலி நகைகளுடன் உதவி மேலாளர் செந்தில்குமார் கேபினுக்கு சென்றார். இதை அறிந்து ஆடிபோன செந்தில்குமார் சப்தமில்லாமல் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.
பின்னர் நகை மதிப்பீட்டாளர் முன்பு அடமானத் தொகைக்காக காத்திருந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மணிமாறன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 20 பவுன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
- உடையார்பாளையம் போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாராங்குறிச்சி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழை வாய்ந்த மகா புத்து மாரியம்மன் கோவில் உள்ளது,இக் கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளிலில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு இக் ேகாவிலில் தினந்தோறும் க ாலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இக்கோவிலில் வழக்கம் போல் நேற்று பூஜைகள் முடித்து கோவில் கதவை பூட்டிவிட்டு பூசாரி சென்று விட்டார்.இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் அணிந்திருந்த 2 லட்சம் மதிப்பிலான தோடு, மூக்குத்தி மற்றும் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து ஊர் தலைவரிடம் பூசாரி தெரிவித்தார். அவர் உடனடியாக உடையார் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேஜஸ் ரெயில் அரியலூரில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது
- பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டுகோள்
அரியலூர்,
மாவட்ட தலைநகரான அரியலூரில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் சிமெண்ட் ஆலைகள், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. இதனால் பல மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், உற்பத்தியாளர்கள், டாக்டர்கள், மாணவர்கள் அரியலூருக்கு வந்து செல்கின்றனர். ஆத்தூர்- பெரம்பலூர்- அரியலூர்-தஞ்சாவூர் என தேசிய நெடுஞ்சாலை என்.எச். 136- ஒட்டியுள்ளது அரியலூர் ெரயில் நிலையம் மட்டுமே. இதனால் அந்த சாலையையொட்டி உள்ள ஊர்களை சேர்ந்தவர்களும் பக்கத்து மாவட்டமான பெரம்பலூரில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் பஸ்களிலும், கார்களிலும் அரியலூர் வந்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். வைகை, பல்லவன் ரெயில்களில் தினமும் அரியலூரில் இருந்து பலர் பயணம் செய்கின்றனர். சென்னை, மதுரைக்கு விரைவாக பயணம் மேற்கொள்ள பல பயணிகள் விரும்புகின்றனர். அரியலூர் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. எனவே அரியலூர் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ெரயில் நின்று சென்றால், பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தென்னக ரெயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே அதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- அரியலூரில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர்,
அமைப்புச்சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பு சிஐடியு-வினர்ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிலாளர்களுக்கும்வா ரியம் மூலம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து பெண்தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து நல வாரிய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கலெக்டர் தலைமையில் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் அமைப்பு சாரா வாரியங்களுக்கும் வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்து இறந்தாலும் அனைத்து வாரிய உறுப்பினர்கள்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம்வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமைவகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன்ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம், நிர்வாகிகள் பெய்யப்பன், மதி உள்ளிட்டோர்க லந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- அரியலூரில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது
- ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கு என சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளிக்கலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
- முன்அனுமதி இன்று ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட 30 பேர் மது வழக்கு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார், அனுமதி பெறாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூறி, அவர்களை கலைந்து செல்ல கூறினர். ஆனால் அதையும் மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 30 பேர் மீது உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது
- மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 397 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 397 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டார். இக்கூட்ட த்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அனைத்து த்துறை அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
- கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் பூங்கோதையிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.அக்கட்சி நிர்வாகிகள் மொ.மணி, ஆர்.பெரியசாமி, பசுபதி, சுந்தரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் த.தண்டபாணி ஆகியோர் அளித்த மனுவில், கருப்பி லாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள மக்கள் சிகிச்சைக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஆகவே மக்களின் நலன் கருதி இக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மேலும் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். பள்லி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ஏரி வரத்து வாய்க்கால் கரையை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தல்
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் பேணியில் ஈடுபட்டனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வே ண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.ஐ செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு பவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழி யர்கள், கல்வி த்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் அனை வரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139 மற்றும் 152 ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும். சாலைப்ப ணியாள ர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோ ரிக்கை விளக்கவு ரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட பொருளாளர் காமராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி இளங்கோவன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கநிர்வாகி பழனிவேல், எம்.ஆர்.ஐ செவிலியர்கள் சங்க நிர்வாகி ராகவன் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.பின்னர் அனைவரும், அங்கிருந்து பல்துறை வளாகம் வரை பேரணியாகச் சென்றனர்.






