என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு
    X

    அம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு

    • ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
    • உடையார்பாளையம் போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாராங்குறிச்சி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழை வாய்ந்த மகா புத்து மாரியம்மன் கோவில் உள்ளது,இக் கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளிலில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு இக் ேகாவிலில் தினந்தோறும் க ாலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இக்கோவிலில் வழக்கம் போல் நேற்று பூஜைகள் முடித்து கோவில் கதவை பூட்டிவிட்டு பூசாரி சென்று விட்டார்.இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் அணிந்திருந்த 2 லட்சம் மதிப்பிலான தோடு, மூக்குத்தி மற்றும் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து ஊர் தலைவரிடம் பூசாரி தெரிவித்தார். அவர் உடனடியாக உடையார் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×