என் மலர்
அரியலூர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீஸ்காரர்கள் ராமலிங்கம், அருள்ஜோதி ஆகியோர் அங்கு சென்றனர்.பின்னர் கலை நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் அருள்ஜோதியை அதே ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 38) மற்றும் கீர்த்தி வாசன் (21) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கல்லை எடுத்து காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து உடையார்பாளையம் போலீசில் அருள்ஜோதி புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, கீர்த்திவாசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.இவர் சம்பவத்தன்று ஆடுகளை வயல்காட்டுக்கு ஓட்டிச்சென்று மேய்த்துவிட்டு, வழக்கம்போல் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டிவிட்டு தூங்கச்சென்றார்.அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த ராணி, உடனடியாக ஆடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்றார்.அப்போது 4 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் ஆட்டை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராணி சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆட்டை திருடியதாக சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (21), வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (22) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார்.
- அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கபபட்டது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் அரியலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு வரப்பெற்ற இணைமானிய தொகையிலிருந்து 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வாங்கிடும் வகையில் தலா ரூ.10,000 வீதம் என மொத்தம் ரூ.60,000 மதிப்பில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தந்தையுடன் தகராறு காரணமாக பூசாரியை, வாலிபர் அரிவாளால் வெட்டினார்
- அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 50), கோவில் பூசாரி. இவரது சகோதரர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன்.
இதில் பாலையா வடவீக்கத்தில் வசித்து வருகிறார். பாலகிருஷ்ணன் ஜெயங்கொண்டத்திலும், ராதாகிருஷ்ணன் காட்மன்னார்குடியிலும் வசிக்கின்றனர்.
பாலையாவிற்கும் இவரது அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் வீட்டுமனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த வாரம் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பூசாரியாக இருந்த பாலையாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணனின் மகன் தாமரைச்செல்வன் (24) தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 20-ந் தேதி பாலையாவை கத்தி மற்றும் அரிவாளால் பல்வேறு இடங்களில் வெட்டியதாக தெரிகிறது.
இதில், படுகாயம் அடைந்த பாலையாவை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய தாமரைச்செல்வன் மற்றும் வசீகரன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரியலூர் சிங்காரத்தெருவிலுள்ள குட்டையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் த.தண்டபாணி கோரிக்கை மனு
அரியலூர்,
அரியலூர் சிங்காரத்தெருவில் உள்ள குட்டையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் த.தண்டபாணி கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிங்காரத்தெருவில் (வார்டு எண் 10) நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டை தற்போது நெய்வேலி காட்டாமணக்கு சூழ்ந்து புதர்காடாக காட்சியளிக்கிறது. இங்கு விஷ பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. அவை இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடனே வசித்து வருகிள்றனர். எனவே, அந்த குட்டையை சீரமைத்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- அரியலூர் ஐடிஐ-ல் மாணவர் சேர்க்கை
- காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு
அரியலூர்
அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படும்.
கல்வித்தகுதி எட்டாம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பக்கட்டணம் ரூ.50 மட்டுமே. ஒரு வருட தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, இரண்டு வருட தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195. இணையதளம் வாயிலாகவும் நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை நடைபெறும். மேலும் தொடர்புக்கு அரியலூர் - 9499055877, 04329-228408, ஆண்டி மடம் - 9499055879 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவித்து உள்ளார்.
- ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்ககக் கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது
- ஜல்லிகட்டு காளையுடன் வந்து மனு அளித்தனர்
அரியலூர்,
ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்ககக் கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், தஞ்சை ருத்ரன் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளப்படி, ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். மாடு பிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் காளைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக காளைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்களை, நுழைவு வாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி மனு அளிக்க 5 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
- மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
- கொலை செய்யப்பட்ட மணி சமீபத்தில் தனது இரண்டாவது மனைவிக்கு சொத்துகளை பாகப்பிரிவினை செய்து கொடுத்ததாக கூறப்பட்டது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கரையான் குறிச்சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 63). 2 பொண்டாட்டிக்காரர். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து கால்நடைகள் வளர்த்து வந்தார்.
இவரின் முதல் மனைவி ராணிக்கு (55) ராஜேஷ் என்ற ஒரு மகனும், இரண்டாவது மனைவி பிரேமாவுக்கு (50) பிரதீஷ் ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இரு மனைவிகளும் கரையான் குறிச்சியில் எதிரெதிர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
வழக்கமாக மணி மாலையில் வாரணவாசி பிள்ளையார் கோவில் கீழ்ப்புறம் உள்ள தனது தோட்டத்துக்கு செல்வார். பின்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு கால்நடைகளை அங்குள்ள கொட்டகையில் அடைத்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புவார். நேற்று மாலை தோட்டத்துக்கு புறப்பட்டு சென்ற மணி வீடு திரும்ப வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த 2-வது மனைவி பிரேமா அதிகாலை மகனுடன் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது ஆட்டு கொட்டகை முன்பு அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து பிரேமா கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் சம்பவ இடத்தில் துப்பறியும் நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை நடத்தினார்.
கொலை செய்யப்பட்ட மணி சமீபத்தில் தனது இரண்டாவது மனைவிக்கு சொத்துகளை பாகப்பிரிவினை செய்து கொடுத்ததாக கூறப்பட்டது. ஆகவே சொத்து தகராறு காரணமாக மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.2 பெண்டாட்டிக்காரர் நள்ளிரவு தோட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும்அ.தி.மு.க. நீட் தேர்விற்கு விதி விலக்கு கேட்டு நிர்பந்திக்க வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் ஆலோசனை கூறி உள்ளார்
- அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
அரியலூர்,
அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மறியல் போராட்டம் நடைபெறும். இதில் அரியலூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு நிர்பந்தம் செய்யலாம். ஆனால் அது குறித்து எதுவும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.
மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்கி அங்கு மக்களை பிரித்து தான் வெற்றிப் பெற்றுவிடலாம் என பாஜக நினைக்கிறது. இது போன்ற சூழ்ச்சி இனியும் ஒரு காலம் நடக்காது.
அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும், சுயசார்பின்மையும் பாதுகாக்க இந்திய கூட்டணி பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்க வேண்டும் என்பதே இந்திய கூட்டணியின் முக்கிய குறிக்கோளாகும்.
காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் . இந்த விசயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்றார். பேட்டியின் போது, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, நிர்வாகி கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- புதுநடுவலூரில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டு உள்ளார்
- காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
அரியலூர்,
பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூரை சேர்ந்தவர் மருதுதுரை (வயது 36), கொத்தனார். இவருக்கு மலர்கொடி (27) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மலர்கொடியை மருதுதுரை தாக்கியதோடு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மலர்கொடி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக மலர்கொடி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து மருதுதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கட்டாய திருமணம் செய்து வைத்ததால்ஆத்திரமடைந்த சிறுமி பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து முயன்றுள்ளார்
- போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி. மனைவி ரதியா (வயது 23). இவர்களுக்கு பிறந்து 41 நாளான க ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிவு செய்து,
ரதியாவின் அண்ணன் மற்றும் அவரது 16 வயதுடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேற முடிவு செய்த சிறுமி, கணவரின் அண்ணன் குழந்தைக்கு விஷம் வைத்து ெகால்ல முயன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை கைது செய்து திருச்சியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
- நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து அரியலூரல தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்
அரியலூர்,
'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் மாவட்ட தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவற்றின் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் லதா பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான சிவசங்கர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களையும், பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் 'நீட்' தேர்வு அமைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவ கனவில் இருந்த பல மாணவ- மாணவிகளை 'நீட்' தேர்வு பலி கொண்டுள்ளது. எனவே 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் 'நீட்' தேர்வு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என கவர்னர் ரவி பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் 'நீட்' தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கழக துணை அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தாயகம் ரவி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக அரியலூரில் கடும் வெயில் அடித்தது. பந்தலை சுற்றிலும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைதொடர்ந்து அனைவருக்கும் குளிர்பானங்களை கொடுத்து போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சஞ்சய் குமார் நன்றி கூறினார்.






