என் மலர்
அரியலூர்
- அரியலூர் அரசுப் பள்ளியில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நீலவாணன் பங்கேற்று, புகழ்வாய்ந்த ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்த நாளான ஆக.29 அன்று முதல் தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப்படுகிறது.மூன்று முறை ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வெல்ல காரணமாக இருந்த அந்த மகானின் நினைவாக தேசிய விளையாட்டு நாள் கொண்டாடுகிறோம் .பள்ளி மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு தெரிந்த விளையாட்டை தேர்ந்தெடுத்து முழு திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி உங்கள் கையில் வந்து சேரும். அனைத்து விளையாட்டிலும் உங்களால் வாகை சூட முடியும் என்று முதலில் நம்பிக்கை கொள்ளுங்கள்.விளையாட்டு உங்களை உலகம் முழுவதும் அடையாளம் காட்டும்.விளையாட்டு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கும் .தொடர்ந்து விளையாடுபவர்களை நோய்கள் எளிதில் தாக்காது. வலிமையான உடலும் வளமான சிந்தனையும் நமது நாட்டிற்கு இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்றார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவில் மாணவர் ஒருவருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நீலவாணன்.முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். முடிவில் ஆசிரியை கோகிலா நன்றி கூறினார். முடிவில் ஆசிரியை கோகிலா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு கவுன்சிலர் கொண்டு நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் துணைத் தலைவர் வெ.கொ கருணாநிதி முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான. பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீன்சுருட்டி- மேலணிக்குழியில் தி.மு.க. பிரச்சார கூட்டம் நடைபெற்றது
- ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உட்பட்ட மீன்சுருட்டி மற்றும் மேலணிக்குழி ஆகிய ஊராட்சியில், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிஆர்எம்.பொய்யாமொழி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீராசாமி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எம்.ஜி.ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் முல்லைநாதன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் இரா.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.கே.பி.சங்கரன், ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ரேவதிசௌந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சிக்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பால.பிரவின்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்
- உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் அன்பரசன் (வயது 31). விவசாயி. இவரது மனைவி சந்தியா (27). அன்பரசன், தனது தந்தை பன்னீர்செல்வத்துடன் நேற்று அதிகாலை தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது திடீரென்று அன்பரசனை பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை, பன்னீர்செல்வம் அருகில் உள்ள சுத்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அன்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அளிக்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதே போன்று கல்வி, மருத்துவ உதவிக் கேட்டு வரும் மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் மனுக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். துறை சார்ந்த கோரிக்கைகள் தமிழக முதலவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
முதல்வர் தெரிவித்ததை போன்று ஏழை, எளிய மக்கள் அளிக்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக உணர்ந்து பார்ப்பதுடன் அவர்களது மனுக்களை நிராகரிக்காத வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.
முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் உதயநிதி, அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள சிவசங்கர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அரசு சிறப்பு திட்ட செயலாகத்துறை செயலர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- நைனார்குடிகாடு கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்ட கோரிக்கை
- தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலர் முடிமன்னன் தலைமையில் கலெக்டரிடம் மனு
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்த நைனார்குடிகாட்டில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலர் முடிமன்னன், துணைச் செயலர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் ரகுபதி, அவைத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் மனுவை அளித்தனர்.
அந்த ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்த நைனார்குடிகாடு கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும். ஆர்.எஸ்.மாத்தூர் சித்தேரியில் வண்டல் மண் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள காஞ்சனா ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். அசான்வீரன் குடிகாடு ஊராட்சிக்கு கூடுதல் துப்புறவு பணியாளர் மற்றும் குப்பை வண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
- அரியலூரில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் வாக்கு சாவடி மாற்றம் குறித்து ஆலோசனை
அரியலூர்
அரியலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,
அரியலூர் சட்ட மன்ற தொகுதியில் 2,54,684 வாக்காளர்களும், 303 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2,52,401 வாக்காளர்களும், 290 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில்
அரியலூர் சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி அமைவிடம், கட்டிட மாற்றம் பிரிவின் கீழ் 5 வாக்குச்சாவடிகளும், பெயர் மாற்றம் பிரிவின் கீழ் 3 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் பிரிவில் 20 வாக்குச்சாவடி மையங்களும், வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் கட்டிட மாற்றம் பிரிவின் கீழ் 1 வாக்குச்சாவடி என அரியலூர் மாவட்டத்திற்கு மொத்தம் 29 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைக்கப்பட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டது.
மேற்படி மறுசீரமைக்கப்பட உள்ள வரைவு வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக ஆட்சேபனை அல்லது கருத்து ஏதேனும் இருப்பின் அது குறித்து ஒரு வார காலத்தில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடமோ (அல்லது) உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் வட்டாட்சியர்களிடமோ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்கு, கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டம் 357 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது
- மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு
அரியலூர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய 357 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாயர் அலுவலர்கலைவாணி, தனித்துணை ஆட்சியர்இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர்ராமலிங்கம், மாவட் ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய் ஆய்வு செய்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய் ஆய்வு செய்தார். அரியலூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணிகளை பார்வையிட்டு , பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகள் தொடங்கிய நாள், முடிவுறும் நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து, பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரியலூர் ஒன்றியம், மேலக்கருப்பூ கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குமாரசாமி ஏரி தூர் வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணியினையும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பார்வையிட்ட அவர்,தொடர்ந்து ஜெயங்கொண்டம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் உணவினை வழங்க வேண்டும் எனவும், விடுதிகளின் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொணட் அவர், அங்கு அனைத்து துறை அலுவலர்களிடம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கோவில் பழுதடைந்த நிலையில் 12 வருடங்களாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலில் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.
- ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. கோவில் பழுதடைந்த நிலையில் 12 வருடங்களாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் கோவில் புணரமைப்பு பணி நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கோவில் குடமுழக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் காரணமாக கோவில் விழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலில் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோடங்குடி கிராமத்தில் உள்ள நாகல் ஏரி கரையிலிருந்து பூங்கரகம் சூடிக்கப்பட்டு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்தனர்.இந்த பால்குடமானது கோடங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக, மேளதாளம் மற்றும் வான வேடிக்கையுடன் கோவிலை வந்து அடைந்தது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக எடுத்து வந்த பால் குடங்களில் உள்ள பாலை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபாடு செய்தனர். இதில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு
- மீன்சுருட்டி அருகே பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி இறந்து போனது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவருடைய மனைவி கார்குழலி இவர்களுக்கு ஜெனிஷாஸ்ரீ(வயது 7) ஒரு பெண் குழந்தை ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.மணிகண்டன் என்பவர் லாரி டிரைவர் என்றும் அவர் தேனி மாவட்டம் அருகில் லாரி ஒட்டிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் மணிகண்டன் மனைவிக்கு தற்போது குழந்தை பிறந்து உள்ளது.கார்குழலியின் அக்கா செவ்வந்தி குழந்தை பிறந்ததை பார்க்க சென்றதாக தெரிகிறது.கார்குழலி தனது மகள் ஜெனிஷாஸ்ரீயை, மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் உள்ள வன்னியர் தெருவை சேர்ந்த தனது தாயார் லெட்சுமி வீட்டில் விடுமாறு கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் பாட்டி வீட்டில் விளையாடி கொண்டு இருந்த சிறுமி சிறிது நேரத்தில் காணாமல் போனார்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.பின்னர் ஜெனிஷாஸ்ரீ விளையாடி கொண்டு இருந்த இடத்தில் கால் தடத்தை வைத்து பின் தொடர்ந்து சென்று பார்த்த போது அருகில் உள்ள குளத்தில் இறங்கியது தெரிவித்ததையடுத்து, குளத்தில் இறங்கி தண்ணீரில் சிறுமி மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுவரைக்கு தகவல் இருந்தா மீன்சுட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் மது போதையில் மனைவியை அறிவாளால் வெட்டிய கணவன் கைது
- அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி ஐஸ்வர்யா (29) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன .இந்நிலையில் சங்கர் இவரது மனைவி ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்த சங்கர் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஐஸ்வர்யாவின் இரண்டு கைகளிலும் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐஸ்வர்யாவை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐஸ்வர்யா சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






