என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
அரியலூர்
ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் தழுதாழைமேடு துணை நிலை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், துளாரங்குறிச்சி, சூரியமணல், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, இடங்கண்ணி, வேம்புகுடி, வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர், திரிபுரந்தான், தென்னவநல்லூர், இடைகட்டு வடக்கு/ தெற்கு, ஆயுதகளம், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
- இளம் பெண் மாயமானார்
- வீட்டை விட்டு வெளியே சென்றார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் காலனி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகள் அனுஷா (வயது 19). இவர் காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கார் மோதி வக்கீல் படுகாயம் அடைந்தார்
- பெட்ரோல் இல்லாமல் நின்ற போது சம்பவம்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 56). இவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் அரியலூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணகெதி அருகே பெட்ரோல் இல்லாமல் நின்றது. அப்போது அந்த வழியாக தருமபுரி மாவட்டம் கத்திரிப்பெட்டி கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சிங்காரவேலன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரவேலனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக சக்தி மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவிலை சுற்றி பார்க்க சென்ற கல்லூரி மாணவர் ஏரியில் மூழ்கி பலியானார்
- 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார்.
அரியலூர்
கல்லக்குடி தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் சபரிவாசன் (வயது 19). இவர் கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார்.
இவர் தனது நண்பர்களான அரசு (20), சக்தி (20), கோகுலக்கண்ணன் (21), சூரியா (20), ஹரிஹரன் (17), சரவணகுமார் (19) ஆகியோருடன் உடையார்பாளையம் அருகே மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் 3 நாள் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு உடையார்பாளையம் பெரியகோவிலை சுற்றி பார்க்க சென்று உள்ளனர்.
அப்போது அங்குள்ள பெரிய ஏரியில் அரசு, சக்தி ஆகியோர் குளித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள நீராவி மண்டபத்துக்கு சென்று உள்ளனர். அதை பார்த்த சபரிவாசனும் குளிக்க ஆசைப்பட்டு ஏரியில் குதித்து நீராவி மண்டபத்துக்கு பாதி தூரம் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அரசு மற்றும் சக்தி ஆகியோர் சபரிவாசனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபாலன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சபரிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாடகை செலுத்தாததால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
- காய்கறி மார்க்கெட்டில்
அரியலூர்
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான காந்தி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 52 கடைகள் உள்ளன. அதில் பல கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கி அதிகளவில் வைத்துள்ளதால் அவர்களுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவைத்தொகை கட்டத்தவறினால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஒரு கடையின் உரிமையாளர் தவிர மற்ற அனைவரும் நிலுவைத்தொகையை செலுத்தி விட்டனர். இதனைதொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.
- விக்கிரமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார்
- எரியாத மின் பல்பை மாற்றியபோது விபரீதம்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம்(வயது 36). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது வீட்டில் உள்ள ஒரு மின் விளக்கு எரியவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து ஆரோக்கியம் மின் விளக்கை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ஆரோக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபுரந்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஆரோக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் ஆரோக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ஆரோக்கியத்தின் மனைவி அரியதங்கம் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கிரிவலம் தொடங்கியது. ஊர்வலமானது கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இரவு 7 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்
- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மடியேந்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக் தாவூத் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட பொருளாளர் ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மடியேந்தி முழக்கமிட்டனர்.
- அரியலூர் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது
- பொதுமக்களிடமிருந்து பெற்ற 17 கோரிக்கை மனுக்கள் மீது எஸ்.பி. விசாரணை மேற்கொண்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 17 கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். பின்னர் அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி கருப்பையா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் திராளக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அரியலூர்,
அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பாலம் அருகேயுள்ள ஸ்ரீகருப்பையா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி பக்தர்கள் புனித நீர் எடுத்துவரப்பட்டு,அன்று மாலை யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு புதன்கிழமை காலை 9.10 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 9.30 மணியளவில் கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்திலுள்ள விநாயகர், இடையர் கருப்பு, மருதையன், சின்னையா, ஒண்டி புலிகருப்பு, நல்லமுத்தாயி, பொம்மியாயி, வண்டு தின்னாயி, பாப்பாத்தி அம்மாள், ஓம் சக்தி, பச்சையம்மாள், குதிரை தோரணவாயில் ராகு, கேது ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் திராளக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாம்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
- திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தை சேர்ந்த கருப்பையனின் மகன் ராமு (வயது 22). இவர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த அடிபட்டது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வானதிரையன் கிராமம் கோவில் மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் டிரைவர் பிணம் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
- கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வானதிரையன் குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் மாலை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த பொக்லைன் எந்திரத்தை டிரைவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்த திருஞானத்தின் மகன் வெங்கடேசன்(வயது 28) ஓட்டி வந்து நிறுத்தியிருந்தார். நேற்று காலை அப்பகுதியில் மண் அள்ளப்பட இருந்தது. இந்நிலையில் அய்யனார் கோவில் மண்டபத்தில் தூக்குப்போட்ட நிலையில் வெங்கடேசன் பிணமாக தொங்கினார். கோவிலுக்கு வந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






