என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்
    X

    மரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்

    • மாம்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
    • திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தை சேர்ந்த கருப்பையனின் மகன் ராமு (வயது 22). இவர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த அடிபட்டது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×