என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
    X

    பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

    • அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கிரிவலம் தொடங்கியது. ஊர்வலமானது கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இரவு 7 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×