என் மலர்
அரியலூர்
- கூட்டுறவு துறை இணைப்பதிவாளரை கண்டித்து
- ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரேஷன் கடை பணியாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் கூட்டுறவு துறை இணைப்பதிவாளரை கைது செய்து அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்போது சங்கத்தின் மாநில தலைவர் ஜெயசந்திர ராஜா உடனிருந்தார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் நடுவலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையலூர், கோரைகுளம், காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூர், சாத்தாம்பாடி, முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுப்பாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையாதியலூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை மற்றும் துணை மின்நிலையத்திற்கு அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் கிராமிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
- அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.
- இதேபோல் விடுதியில் தங்கி படிப்பவர்கள், விடுதியில் சேர்ந்தனர்
அரியலூர்
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்தநிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வகுப்புகள் தொடங்கின. அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின. இதில், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு முதல் நாளில் கல்லூரி தொடர்பாகவும், பாடங்கள் தொடர்பாகவும் விளக்கி கூறப்பட்டன. இதேபோல் விடுதியில் தங்கி படிப்பவர்கள், விடுதியில் சேர்ந்தனர். அடுத்ததாக மருத்துவ மாணவர்களுக்கான சீருடையில் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
- பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம், நன்செய், புன்செய் நிலங்களின் விவரம், மின்சார பயன்பாடு, வாகனங்கள் விவரம், பிற ஓய்வூதியங்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் நேரடி ஆய்வு செய்வதை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்து, அவர்களிடம் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை முறையாக சரிபார்த்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். பின்னர் அவர் வெங்கடகிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையத்தினையும், கயர்லாபாத் ஊராட்சி அரசு நகரில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அரசு நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நர்சரி கார்டனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா நடைபெற்றது
- சிறப்பு திருப்பலி நடைபெற்றது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 24-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மைக்கேல் பட்டி பங்குத்தந்தை அடைக்கல சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை அடைக்கல சாமி தேரை மந்திரித்தார். பின்னர் ஆடம்பர தேர்பவனி தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
- இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- வேலைவாய்ப்பற்றவர்களுக்கு
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கீழப்பழூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆண்களுக்கான செல்போன் சர்வீஸ் பயிற்சி, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சி, எலக்ட்ரிக்கல்-மோட்டார் ரீவைண்டிங் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செய்முறை பயிற்சி, சீருடை, 3 வேளையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன்வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சியில் சேர நாளை (திங்கட்கிழமை) நேர்காணல் நடத்தப்படும். 7-ந்தேதி பயிற்சி தொடங்கும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்தால் போதும். ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல், 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 கொண்டு வர வேண்டும். இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944850442, 7539960190 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வாகன பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை உயர்த்தி விட்டு, தற்போது தேர்தலுக்காக அதன் விலையை குறைத்துள்ளதாக பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர். வாகன பேரணியில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அணைக்குடத்தில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணி, சிலால், தேவாமங்கலம், உதயநத்தம் வழியாக தா.பழூரில் நிறைவடைந்தது.
- அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலை, பெண்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்தும் அவலம் நிலவகிறது
- பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன்பாக 50க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
அரியலூர்,
அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலை, பெண்கள் உயர்நிலை, ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்க பள்ளிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வித்துறையின் அனைத்து அலுவலகங்களும் இந்த வளாகத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த வளாகத்திலும், விளையாட்டு மைதானத்திலும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. Also Read - இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக வழக்கு:ஈரோடு கோர்ட்டு சீமானுக்கு சம்மன் இதில் ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் முதல் காலை உணவு 7 மணிக்கு தயார் செய்யப்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 160 மாணவ, மாணவிகள் காலை 8 மணிக்கு வர தொடங்குகின்றனர். மேலும் உணவு வாசத்தை மோப்பம் பிடிக்கும் நாய்கள், பள்ளி வளாகத்தின் முன்பு சுற்றுச்சுற்றி வருகின்றன. பெற்றோர்கள் சிலர் பள்ளியின் வாசல் வரை குழந்தைகளை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். ஒரு சிலர் மார்க்கெட் தெருவில் உள்ள பள்ளியின் வாசலில் மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் தனியாக பள்ளிக்கு சுமார் 50 மீட்ட தூரம் செல்லும்போது, அவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால் அச்சமடையும் ஓடும் மாணவ, மாணவிகள் கீழே விழும் நிலை உள்ளது. மேலும் அரியலூர் நகரிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. நாய்களை பிடித்து கருத்தடை செய்து வருவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இத்தகைய நிலையில் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களையாவது உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.
- நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா படத்திற்கு ஜெயங்கொண்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
- மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் வி.சி.க சார்பில் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
நீட் தேர்வினால் உயிரை இழந்த அரியலூர் அருகே உள்ள குழுமூரை சேர்ந்த அனிதாவின் உருவப்படத்திற்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 6 -ம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் இலக்கிய தாசன், மாநில பொறுப்பாளர்கள் கொளஞ்சி, இளங்கோ மணி, சிபி ராஜா, மற்றும் நிர்வாகிகள் சின்னராசா சுந்தர் சி கா குமார் முத்துகிருஷ்ணன் சரவணன் சிவகுமார் இளைய பாரதி லோகு நாகா சக்திவேல் வெங்கட் உள்ளிட்ட மாநில மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டடோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நினைவு கூட்டரங்கம் திறக்கப்பட்டது
- ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்திறந்துவைத்தார்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கூட்டம் அரங்கமும் புணர மைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கூட்டம் அரங்கத்தையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ.க. சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம் ஆகியவற்றை, ஒன்றிய குழு தலைவர் கே.பி.என்.ரவிசங்கர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி), ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், ஜெயங்கொ ண்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் தன .சேகர், .மணிமாறன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் எல்.ஐ.சி.யின் 68-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
- டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் விழாவை தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் எல்.ஐ.சி அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் 67-ம் ஆண்டு நிறைவு மற்றும் 68-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, அனைவரும் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அந்நிறுவனத்தின் அரியலூர் கிளை மேலாளர் பி.ஜெயபாலன் தலைமை வகித்து, எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கப்பட்டதின் நோக்கம், அதன் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். முகவர்கள் கிருஷ்ணன், நீலமேகம், பாலு மற்றும் வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக உதவி நிர்வாக அதிகாரி ஜெயா வரவேற்றார். முடிவில் நிர்வாக அதிகாரி தமிழரசன் நன்றி தெரிவித்தார். ஒருவாரம் நடைபெறும் இந்நிகழ்வில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
- அரியலூரில் மத்திய அரசைக் கண்டித்து 13-ம்தேதி மறியல் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி. அறிவித்து உள்ளது
- மறியலில் கலந்து கொள்ள பொதுச்செயலாளர் தண்டபாணி அழைப்பு விடுத்துள்ளார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி சங்கத்தின் பொதுச் செயலர் த.தண்டபாணி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, மத்திய அரசின் பல திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய அரசு கணக்கு தணிக்கை துறை மக்களவையில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யதுள்ளது. மேலும் பங்கு வர்த்தகத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானி குழுமம் பல லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து வரும் அரியலூரில் வரும் 13-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் நடைபெறும். இதில பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ரெ.நல்லுச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ப.ராஜதுரை, துணைச் செயலர் ந. கோவிந்தசாமி, பொருளாளர் கு.வெள்ளையம்மாள், கயர்லாபாத் கிளை நிர்வாகி து.ராஜா, கல்லக்குடி கிளை நிர்வாகிகள் ஆ.பெரியசாமி, கு.வனிதா, பானுமதி, சாந்தி, முருகேசன், எருத்துக்காரன்பாட்டி கிளை மருதமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






