search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி குழந்தைகளை விரட்டும் நாய்கள்
    X

    பள்ளி குழந்தைகளை விரட்டும் நாய்கள்

    • அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலை, பெண்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்தும் அவலம் நிலவகிறது
    • பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன்பாக 50க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலை, பெண்கள் உயர்நிலை, ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்க பள்ளிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வித்துறையின் அனைத்து அலுவலகங்களும் இந்த வளாகத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த வளாகத்திலும், விளையாட்டு மைதானத்திலும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. Also Read - இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக வழக்கு:ஈரோடு கோர்ட்டு சீமானுக்கு சம்மன் இதில் ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் முதல் காலை உணவு 7 மணிக்கு தயார் செய்யப்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 160 மாணவ, மாணவிகள் காலை 8 மணிக்கு வர தொடங்குகின்றனர். மேலும் உணவு வாசத்தை மோப்பம் பிடிக்கும் நாய்கள், பள்ளி வளாகத்தின் முன்பு சுற்றுச்சுற்றி வருகின்றன. பெற்றோர்கள் சிலர் பள்ளியின் வாசல் வரை குழந்தைகளை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். ஒரு சிலர் மார்க்கெட் தெருவில் உள்ள பள்ளியின் வாசலில் மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    இதையடுத்து மாணவ, மாணவிகள் தனியாக பள்ளிக்கு சுமார் 50 மீட்ட தூரம் செல்லும்போது, அவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால் அச்சமடையும் ஓடும் மாணவ, மாணவிகள் கீழே விழும் நிலை உள்ளது. மேலும் அரியலூர் நகரிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. நாய்களை பிடித்து கருத்தடை செய்து வருவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இத்தகைய நிலையில் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களையாவது உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

    Next Story
    ×