என் மலர்tooltip icon

    அரியலூர்

    • இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 31). இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது
    • கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்

    அரியலூர்:

    அரியலூர் நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று அரசு விடுமுறை என்பதால் மாவட்டத்தில் உள்ள மழலை, தொடக்க பள்ளிகளில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர். அவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்து பேசியும், கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த மாணவ-மாணவிகள் நடனமாடினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    • தாயை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • சொத்து தகராறில் நடந்த சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலக்கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் மல்லியம்மாள் (வயது 80), இவருக்கும் அவரது மகன் கருணாநிதிக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கருணாநிதி தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மல்லியம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் நதியா (வயது 30). இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி இரவு நதியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது அவர்கள் நதியாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் உடலை பெற்றுச்செல்வோம் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நதியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் மதியழகன் (28), டிராக்டர் டிரைவர் குமரவேல் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நதியாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    • மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெறுகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் நிறைவாக ஜெயங்கொண்டத்தில் நாளை (வியாழக்கிழமை) தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று காலை புதுச்சாவடி கிராமத்தில் தப்பாட்ட இசைக்குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மீனா, பத்மாவதி, சேகர் குமார், வீரப்பன், தியாகராஜன் ஆகிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பிரசார பயணம் ஆமணக்கந்தோண்டி, கடாரம்கொண்டான், உட்கோட்டை, வீரசோழபுரம், கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாநல்லூர், முத்து சேர்வாமடம், மீன்சுருட்டி, வெத்தியார் வெட்டு, சலுப்பை வழியாக ஜெயங்கொண்டத்தில் இரவு 7 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது. இதில், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மூதாட்டியை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்ற

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மனைவி சின்னம்மா. இவரது மறைவையொட்டி பால்தெளி காரியம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 45) என்பவர் தனது தாயார் வசந்தாவுடன் (70) துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த செல்லதுரை மகன் சக்திவேல் (33), அவரது சகோதரர் முருகானந்தம் (38) ஆகியோர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது தாயார் வசந்தாவை தகாத வார்த்தைகளால் திட்டி வசந்தாவை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

    • ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • வாலாஜா நகரத்தில் ரூ.2¾ கோடி மதிப்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வாலாஜாநகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அமைச்சர்சிவசங்கர் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.88.40 லட்சம் மதிப்பில் 104 உழவு எந்திரங்களையும், ரூ.1.44 லட்சம் மதிப்பில் 4 களையெடுக்கும் எந்திரங்களையும் வழங்கினார். இதேபோல் அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.31 லட்சம் மதிப்பில்18 உழவு எந்திரங்களையும்,37 களையெடுக்கும் எந்திரங்களையும் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக மாற்ற அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், அவர் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும் வழங்கினார்.

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்தனர்
    • பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, அரியலூர் நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி துறையினரால் மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் (பிளாஸ்டிக்) 160 கிலோ அளவு 6 கடைகளில் கண்டறியப்பட்டு உடன் பறிமுதல் செய்யப்பட்டது. 6 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளருக்கு எச்சரிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு, தரம், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

    • கால்நடை கிளை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில்

    அரியலூர்

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுரேஸ் கிருஷ்டோபர், உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ரமேஷ், டாக்டர் ஜெயந்தி, கால்நடை உதவி மருத்துவர் ராஜ்குமார், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி மகேந்திரன், துணை தலைவர் ராஜகுமாரி கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அரியலூர்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கக்கல்வி, பள்ளி கல்வியில் தலா 3 ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியை, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    தொடக்க கல்வியில் முல்லையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கையன், பெரிய திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பள்ளி கல்வியில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமலோற்பவம், சோழன் குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகுணா, மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜேந்திரன் ஆகிய 8 பேருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
    • விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ள மின் நகரில் சித்தி விநாயகர், மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு யாத்ரா தானம் புறப்பட்டு மூலவர் விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×