search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
    X

    8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

    • 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அரியலூர்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கக்கல்வி, பள்ளி கல்வியில் தலா 3 ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியை, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    தொடக்க கல்வியில் முல்லையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கையன், பெரிய திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பள்ளி கல்வியில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமலோற்பவம், சோழன் குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகுணா, மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜேந்திரன் ஆகிய 8 பேருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×