search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற  பால்குடம் திருவிழா
    X

    12 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற பால்குடம் திருவிழா

    • கோவில் பழுதடைந்த நிலையில் 12 வருடங்களாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலில் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.
    • ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. கோவில் பழுதடைந்த நிலையில் 12 வருடங்களாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் கோவில் புணரமைப்பு பணி நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கோவில் குடமுழக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் காரணமாக கோவில் விழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலில் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோடங்குடி கிராமத்தில் உள்ள நாகல் ஏரி கரையிலிருந்து பூங்கரகம் சூடிக்கப்பட்டு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்தனர்.இந்த பால்குடமானது கோடங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக, மேளதாளம் மற்றும் வான வேடிக்கையுடன் கோவிலை வந்து அடைந்தது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக எடுத்து வந்த பால் குடங்களில் உள்ள பாலை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபாடு செய்தனர். இதில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×