என் மலர்tooltip icon

    அரியலூர்

    ரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனோகிலால்ஷா(வயது 40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு பீகார் சென்றுவிட்டு இங்கு வந்த அவர், செல்போனில் தனது மனைவியுடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அனோகி லால்ஷா நேற்று முன்தினம் இரவு ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகே சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனோகி லாஷ்வா உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பீகாரை சேர்ந்த தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனோகிலால்ஷா(வயது 40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு பீகார் சென்றுவிட்டு இங்கு வந்த அவர், செல்போனில் தனது மனைவியுடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால், மனமுடைந்த அனோகி லால்ஷா நேற்று முன்தினம் இரவு ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகே சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனோகி லாஷ்வா உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மழையால் மின்கசிவு ஏற்பட்டதில் செந்துறையில் பெற்றோரை இழந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி(வயது 18). பெற்றோரை இழந்த இவர் தனது அத்தை தமிழ்ச்செல்வி வீட்டில் வசித்து வந்தார். பாலாஜி செந்துறையில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்தமழை பெய்தது. இந்த நிலையில் சமத்துவபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்பெட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கம்பிவேலியில் பாய்ந்து கொண்டிருந்தது.

    இற்கிடையில் நேற்று காலையில் பாலாஜி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது மழை பெய்து இருந்ததால் சகதிகாடாக காணப்பட்டது. சகதியில் பாலாஜி மிதித்தபோது, எதிர்பாராமல் வழுக் கியது. இதனால் அவர் கீழே விழாமல் இருப்பதற்காக கம்பிவேலியை பிடித்துள்ளார். அதில் இருந்து வந்த மின்சாரம் பாலாஜி மீது பாய்ந்தது.

    இதனையடுத்து அலறித்துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    உடையார்பாளையம் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையம் :

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த கழுமங்கலம் கீழதெருவில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை உள்ளது. இந்த சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை மண்சாலைபோல் காணப்படுகிறது. தற்போது ஒரு சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.

    சமீபகாலமாக மழை பெய்து வருவதால் இந்த சாலையில் வாகனம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகனஓட்டிகள் சேற்றில் சிக்குவதோடு, தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

    மேலும் சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாலை சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில் அடிக்கடி கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கும் சம்பவம் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழைக்கு 3 கூரை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன.
    அரியலூர்:

    ‘நிவர்‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதே போல் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் போது நாகமங்கலம் இந்திரா நகரில் வசித்து வரும் ரோஸ்லி என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.

    நேற்று பகலில் பெய்த பலத்த மழையின் போது ரெட்டிபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும், மாலையில் பெய்த மழையில் வைப்பூர் நடுத்தெருவை சேர்ந்த திலிப்குமாரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும் இடிந்து விழுந்தது.

    எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களில் செல்ல முடியாமல் மழைநீர் தேங்கியிருந்தன.

    அதனை தொடர்ந்து வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரத்தை வைத்து தூர்வாரி மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
    அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு 3 கூரை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன.
    அரியலூர்:

    ‘நிவர்‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதே போல் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் போது நாகமங்கலம் இந்திரா நகரில் வசித்து வரும் ரோஸ்லி என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.

    நேற்று பகலில் பெய்த பலத்த மழையின் போது ரெட்டிபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும், மாலையில் பெய்த மழையில் வைப்பூர் நடுத்தெருவை சேர்ந்த திலிப்குமாரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும் இடிந்து விழுந்தது.

    எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களில் செல்ல முடியாமல் மழைநீர் தேங்கியிருந்தன.

    அதனை தொடர்ந்து வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரத்தை வைத்து தூர்வாரி மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

    ஆண்டிமடம் அருகே சரக்கு வேன்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன்கள் பிரபுவேல்(வயது 20), சிவராமன்(17). இதில் பிரபுவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ‘டி பார்ம்’ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் ஆண்டிமடத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபுவேல் ஓட்டினார். கவரப்பாளையம் கிராமம் அருகே வந்தபோது முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பிரபுவேல், சிவராமன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பிரபுவேலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. சிவராமனுக்கு காலில் அடிபட்டது.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரபுவேலுக்கு தலையில் பலத்த அடிபட்டதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரபுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். சிவராமனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து சரக்கு வேனை ஓட்டி வந்த மதுரை பகுதியை சேர்ந்த தினேஷ்குமாரை(27) கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கியதாக தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி(வயது 59). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தமிழரசன்(35) என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆசைதம்பி அவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆட்களை வைத்து நிலத்தை சீர் செய்து கொண்டிருந்தார். இதனை அறிந்த தமிழரசன், அவரது உறவினர்கள் நடராஜன்(32), இவருடைய மனைவி இந்துமதி(32), மற்றொரு நடராஜன்(35), இளவரசன்(32), பரமசிவம்(28) ஆகிய 6 பேரும் சேர்ந்து ஆசைதம்பியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஆசைதம்பி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாமை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. இதில் வி.கைகாட்டி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக வழங்க வேண்டிய ஆவணங்கள் குறித்து சிறப்பு முகாமில் ஈடுபட்டிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து தலைமை கொறடா பேசுகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். மேலும் இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அந்தந்த பகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளவர்களை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது அரியலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    மீன்சுருட்டியில் பள்ளி எதிரே உள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். பின்னர் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் பிரிக்கப்பட்டு புதிதாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளியின் எதிரில் அரசால் வெட்டப்பட்ட சுமார் 30 அடி ஆழமுள்ள கல் கிணறு ஒன்று உள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கிணற்றில் இருந்து தான், அந்த காலத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள ஓட்டல்காரர்கள், மாட்டு வண்டியில் பேரல்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்றனர்.

    இந்த பகுதியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்த இந்த கிணற்றில் இருந்து பெண்கள் ஒரே நேரத்தில் 2, 3 குடங்களில் தண்ணீர் எடுத்து சுமந்து செல்வார்கள். மேலும் இந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் குடிக்கவும், தட்டுகள் கழுவவும் கிணற்று தண்ணீரை பயன்படுத்தியதோடு, குடிநீருக்காக வகுப்பு அறையில் பானைகளில் தண்ணீரை எடுத்து வைத்து பயன்படுத்தினர். ஆனால் நாளடைவில் ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகள் மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர், கிணறுகளில் தண்ணீர் எடுப்பதை பொதுமக்கள் நிறுத்திக்கொண்டனர். நீண்ட காலமாக பயன்படுத்தாத நிலையில் பள்ளி எதிரே உள்ள கிணறு பாழடைந்துவிட்டது.

    மேலும் தற்போது இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிணற்றின் அருகே இருந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்கத்திற்காக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கிணறு இன்னும் மூடப்படாமல் அப்படியே இருந்து வருகிறது. இந்த கிணற்றின் அருகே போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு உள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாத காலமாக கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கவில்லை. மேலும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் இந்த பகுதியில் தான் விளையாடி வருகின்றனர். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும்போது, கவனக்குறைவாக இந்த கிணற்றில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் இந்த கிணற்றை மூட வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழவெளியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் ஊராட்சி கீழவெளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீழவெளி தெற்கு தெருவில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நீர்த்தேக்க தொட்டி 2012-13-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தூண் போன்றவை சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழலாம் என்ற ஆபத்தான நிலையில் அந்த தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே அரசு பள்ளி, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.

    இந்த தொட்டி இடிந்து விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பெரும் சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 7 பேர் விடுதலை குறித்து தமிழக கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மேலும் தாமதமானால் 7.5 இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போல், 7 பேர் விடுதலை குறித்தும் அரசாணை வெளியிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 

    ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் தற்போது வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேசி வருகிறார். தேர்தல் வரும்போது தான் வன்னிய இன மக்கள் மீது ராமதாசுக்கு அக்கறை ஏற்படும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளித்து தேர்தலிலும் போட்டியிடுவோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது, மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதையே காட்டுகிறது, என்றார்.
    ×