search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தலைமை கொறடா ஆய்வு செய்த காட்சி
    X
    அரசு தலைமை கொறடா ஆய்வு செய்த காட்சி

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாமை அரசு தலைமை கொறடா ஆய்வு

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாமை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. இதில் வி.கைகாட்டி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக வழங்க வேண்டிய ஆவணங்கள் குறித்து சிறப்பு முகாமில் ஈடுபட்டிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து தலைமை கொறடா பேசுகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். மேலும் இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அந்தந்த பகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளவர்களை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது அரியலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×