என் மலர்
அரியலூர்
ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுத்த செல்போன் தொலைத்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை முதலியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் நட்சத்திரவள்ளி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக கணேசன் மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இந்தநிலையில் நட்சத்திரவள்ளி செல்போனை தொலைத்து விட்டாராம்.
இதைஅறிந்த கணேசன் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த செல்போனை தொலைத்துவிட்டாயே என கூறி மகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நட்சத்திரவள்ளி கடந்த 23-ந்தேதி மாலை குண்டுமணி என்ற விஷ விதையை தின்று மயங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நட்சத்திர வள்ளி இறந்தார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார்(வயது 18), கார்த்திகேயன்(19). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று காலை அவர்கள் 2 பேரும், தேர்வு எழுதுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றனர்.
பின்னர் மதியம் மோட்டார் சைக்கிளில் அயன் ஆத்தூர் நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தனர். ரஞ்சித் குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் கார்த்திகேயன் அமர்ந்திருந்தார். புறவழிச்சாலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தை தாண்டி வந்தபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி சாலையில் விழுந்த கார்த்திகேயன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் வானத்திரையான்பட்டிணம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நடராஜன்(வயது 52), சிவக்குமார்(54) ஆகியோர் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
செந்துறை:
அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்காக ஆனந்தவாடி கிராமத்தில் 1982 ஆம் ஆண்டு சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் 270 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் ஒன்றுக்கு 2,500 ரூபாய்க்கு 161 விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. அப்போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 37 ஆண்டுகளாக அவர்களுக்கு வேலை வழங்காத நிலையில் அவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அதில் தற்போது நிரந்தர வேலைக்கு பணியிடம் இல்லை என்று கூறி 57 விவசாய குடும்பத்தினருக்கு ஒப்பந்த வேலை வழங்கப்பட்டது.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், மேலும் 130 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாவும் தெரிவித்த விவசாயிகள், நிலம் கொடுத்த 57 விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், சினிமா இயக்குனருமான கவுதமன் தலைமையில் ஆனந்தவாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து அரசு சுண்ணாப்புக்கல் சுரங்கத்தை, நிலம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பதில் கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் சுரங்க வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் இயக்குனர் கவுதமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால், சுரங்க வாயில் முன்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கலவர தடுப்பு வாகனங்களுடன் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 125 பேர் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஜெயங்கொண்டம், திருமானூர், அரியலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் நான்கு வருடங்களாக பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த தொகையை அவர்களுக்கு தேவைப்படும்போது தரவில்லை என்றும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும்போது நான்கு வகைகளாக குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் உத்தரவிடுவதாகவும், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகளை யாரும் தரம்பிரித்து தராமல் சாலைகளில் கொட்டி விடுவதால், அவற்றை அள்ளி தரம்பிரிக்க நேரமாகிவிடுகிறது என்றும், பணிகளை வரன்முறைப்படுத்த வலியுறுத்தியும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் 50 பெண்கள் உள்பட 125 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்ததாரரிடம் இருந்து அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பெரம்பலூரை தொடர்ந்து ‘கொரோனா’ தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.
அரியலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. சிறிய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் மக்கள் தொற்றுக்கு ஆளாகினர். இதையடுத்து பெரம்பலூரில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் நோய் விரைவில் கட்டுக்குள் வந்தது.
கடந்த நவம்பர் 16-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் புதிய தொற்று இல்லாத நாளாக மாறியது. அன்றைய தினம் வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,228 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். அதன்பின்னர் இந்த 15 தினங்களில் வெறும் 8 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் பெரம்பலூரில் புதிய தொற்று எதுவும் இல்லை. நேற்று 450 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு கூட புதிய நோய் தொற்று கிடையாது.
இன்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, தொடர்ச்சியாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அந்த இலக்கை விரைவில் எட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தநிலையில் தற்போது பெரம்பலூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டமும் தொற்று இல்லாத மாவட்டமாக நேற்று மாறியது. நேற்றைய பரிசோதனை முடிவில் அரியலூரில் ஒருவர் கூட கொரோனாவால் கண்டறியப்படவில்லை. இது சுகாதாரத்துறைக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் தொழில்வளம் இல்லாத மாவட்டமாக இருக்கிறது. இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலையை தவிர்த்து வேறு எந்த தொழில்வளமும் இல்லை. இங்குள்ள தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகம் வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் வைரஸ் வேகமாக பரவியது. இதையடுத்து மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
அரியலூர் தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு படையெடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் வீடுகளுக்கு சென்றனர். இதனால் அவர்களின் குடும்ப அங்கத்தினரும் வைரசுக்கு ஆளாக நேரிட்டது. ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளால் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. அதன் பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் படிப்படியாக தொற்றுகள் குறைந்து நேற்றைய தினம் தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.
இந்த மாவட்டத்தை பொறுத்தமட்டில் இதுவரை 4,564 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 4,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 88 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, திட்டமிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், குறைக்கப்படாத பரிசோதனைகளால் அரியலூரில் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மூலம் தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூரை விரைவில் அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றனர்.

கீழப்பழுவூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுப்பணங்குறிச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் கடத்திய 2 டிராக்டர்களை பிடித்தார்.
இதையடுத்து திருமானூர் போலீசாருக்கு அவர் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் பிரபாகரன் (வயது 29), சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன் ஜெயபால் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவில் சீமை நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதி(60). இவர்கள் 2 பேரும் விவசாயிகள். 2 பேரின் குடும்பத்தினருக்கு இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், ஜோதியிடம் இடப்பிரச்சினை குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த மணிகண்டனின் உறவினர் ராஜலட்சுமி, சுந்தராம்பாள், கனகராஜ் ஆகிய 3 பேரும், அதேபோல் ஜோதியின் உறவினர் மணிவாசகன், மணிகண்டன், செல்வராஜ் ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலானது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்பேரில் மணிகண்டன் மற்றும் அவருடைய உறவினர்கள் ராஜலட்சுமி, சுந்தராம்பாள், கனகராஜ் ஆகியோர் மீதும், ஜோதி மற்றும் அவருடைய உறவினர்கள் மணிவாசகன், மணிகண்டன், செல்வராஜ் ஆகியோர் மீதும் என பெண்கள் உள்பட 8 பேர் மீது விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமானூர் அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை காரில் வந்த கும்பல் பறித்து சென்றது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் பிள்ளையின் மனைவி ஞானம்(வயது 86). ராஜாங்கம் பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் ஞானம் அப்பகுதியில் கீழராஜ வீதியில் உள்ள அவருடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அவரின் வீட்டிற்கு அருகே உள்ள பிள்ளையார் கோவிலை கழுவி சுத்தம் செய்து, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. காருக்குள் சுமார் 4 பேர் இருந்தனர்.
அதில் ஒருவர் இறங்கி வந்து, ஞானத்திடம் திருநீறு கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஞானம் வழங்கிய திருநீறை எடுத்துக்கொண்டு கார் வரை சென்ற அந்த நபர், மீண்டும் திரும்பி வந்து ஞானத்திடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் திடீரென அந்த நபர், ஞானம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் ஏறினார். இதையடுத்து கார் அங்கிருந்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஞானம் கூச்சல் போடவே அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் காரில் வந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார், அங்கு விரைந்து வந்து மர்ம நபர்கள் குறித்து ஞானத்திடம் கேட்டறிந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக அந்த மர்ம நபர்கள் அதிகாலை 4 மணி அளவில் கீழப்பழுவூரில் ஒரு வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு, கையை தட்டிவிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்ததையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர், என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அதே மர்ம நபர்கள் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த ஊனூர் என்ற கிராமத்திலும் ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கீழப்பழுவூர், திருமழபாடி ஆகிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் வானதிரையான்பட்டிணம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(வயது 56), சிவக்குமார்(54) ஆகியோர் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மீன்சுருட்டி அருகே தீக்குளித்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
மீன்சுருட்டி:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சுந்தரேசன்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிரியா(வயது 22). பி.எஸ்சி நர்சிங் முடித்த இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு மெயின் ரோடு தெருவை சேர்ந்த அம்பலவாணன் மகன் பிரபாகரனுக்கும், கடந்த ஜனவரி 1-ந் தேதி திருமணம் நடைபெற்றது. பிரியா தற்போது கர்ப்பமாக இருந்தார். பிரபாகரன் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர் கிடைத்த வருமானத்தில் மது அருந்தி விட்டு வருவாராம். இதனை பிரியா கண்டித்துள்ளார்.
இருந்தாலும் அவர் தொடர்ந்து மது அருந்தி விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த பிரியா கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பிரியாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை நடத்தி வருகிறார். பிரியாவிற்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
செந்துறை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவரது மனைவி மணிமொழி(23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மணிமொழி, மாமனார் மாயவேல், மாமியார் முத்தழகி ஆகியோருடன் அருந்ததியர் தெருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனாரும், மாமியாரும் சாப்பாடு சரியில்லை எனறு கூறியதாக தெரிகிறது. இதனை கேட்ட மணிமொழி, தன்னைத்தான் குறை கூறுகிறார்கள் என்று நினைத்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிமொழிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.