என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது - டிராக்டர்கள் பறிமுதல்
கீழப்பழுவூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுப்பணங்குறிச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் கடத்திய 2 டிராக்டர்களை பிடித்தார்.
இதையடுத்து திருமானூர் போலீசாருக்கு அவர் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் பிரபாகரன் (வயது 29), சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின் மகன் ஜெயபால் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






