என் மலர்
அரியலூர்
அரியலூர் நகரில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சில ஆண், பெண்கள் சுற்றித்திரிகின்றனர். அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கம்புடன் நகர் முழுவதும் சுற்றி வருகிறார். பஸ் நிலையம், கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் காலை, மாலை இருவேளையும் மிகப்பெரிய கம்புடன் சிலம்பம் விளையாடுவது போல் சாலையின் நடுவே நின்று கொண்டு நடந்து செல்பவர்களை அடிப்பதுபோல் அவர் அருகில் செல்வதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.
இதேபோல் நகர பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர். அவர்களை மீட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
மீன்சுருட்டி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், கோவிந்தராஜ் மற்றும் போலீசார் மீன்சுருட்டி பகுதிகளில் உள்ள கடைவீதியில் சோதனை செய்தனர்.
ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியபோது யுத்தப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 35), செந்தில்குமார்(36) மற்றும் சுண்டிப்பள்ளம் காலனி தெருவை சேர்ந்த தமிழரசன்(34) ஆகியோர் தங்களது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது.
இதையெடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் அரசிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு முதல், கொரோனா தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கொரோனா பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் இடத்தில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை தொடர்புடைய குழுவினர் மேற்கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை, அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் காய வைத்த நிலக்கடலையையொட்டி வைக்கப்பட்ட கட்டையின் மீது ஏறியதில் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி விழுந்த தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தா.பழூர்:
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் மணிகண்டன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தா.பழூர் போலீசில் கவுரி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சாலையில் எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லாமல் நிலக்கடலை காய வைத்து விபத்தை ஏற்படுத்தியதாக கோடங்குடி கிராமத்தை சேர்ந்த ரவி(45) மீது பொதுப்பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு ஏற்படுத்தியதற்காக இ.பி.கோ. 283 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருட கம்ப தெருவை சேர்ந்த குமாரின் மகன் மணிகண்டன்(வயது 34). தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கும், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த கவுரிக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 நாட்களாக கோடங்குடியில் உள்ள அவரது மனைவி வீட்டில் மணிகண்டன் குடும்பத்தோடு தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து தா.பழூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது கோடங்குடி கிராம எல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினர், அவர்களின் வீட்டு முன்பு கும்பகோணம் -ஜெயங்கொண்டம் சாலையில் நிலக்கடலைகளை காய வைத்து, அவற்றின் மீது வாகனங்கள் ஏறிவிடாமல் இருப்பதற்காக ஓரங்களில் உருட்டு கட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். அந்த வழியாக மணிகண்டன் வந்தபோது எதிர்பாராதவிதமாக, நிலக்கடலைகளின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு உருட்டுக்கட்டை மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் மணிகண்டன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தா.பழூர் போலீசில் கவுரி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சாலையில் எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லாமல் நிலக்கடலை காய வைத்து விபத்தை ஏற்படுத்தியதாக கோடங்குடி கிராமத்தை சேர்ந்த ரவி(45) மீது பொதுப்பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு ஏற்படுத்தியதற்காக இ.பி.கோ. 283 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அரியலூரில் பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மருதையாறு, கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீர் ஓடுகிறது. கடந்த 17-ந் தேதி மார்கழி மாதம் பிறந்த பிறகு பனியின் தாக்கம் அதிகமாகி மாலை 5 மணிக்கு கடுங்குளிர் ஆரம்பித்து காலை 8 மணி வரை உள்ளது.
வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை போட்டு செல்லும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் ஏற்பட்ட தீயில் பணம் மற்றும் நகைகள் எரிந்து சேதம் ஆனது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரகுடிகிராமம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி செந்தாமரை கண்ணன். இவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்த போது எதிர்பாரத விதமாக கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்புதுறையினர் விரைந்துசென்று தீயை போராடி அணைத்தனர்.
அதற்குள் வீடு முற்றிலும் எரிந்தது. வீட்டில் மகனுக்கு பள்ளியில் கட்டுவதற்கு வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் 9 பவுன் நகை, மேலும் பத்திரம், ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்தது சேதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கிள் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும் கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கவேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரி அறிவுறுத்தினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொலை மற்றும் கொள்ளை, திருட்டை தடுக்கும் வகையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் செங்குந்தபுரம் கிராமத்தில் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் பேசுகையில், பொதுமக்களிடம் குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் திருமணம், திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும் குடியிருப்புவாசிகள் வெளியூருக்குச் செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சென்று வருகின்றனர். அனேக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாமலும், விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு கதவுகளை பூட்டாமலும், ஊருக்கு செல்லும் அவசரத்தில் சிலர் ஜன்னல் கதவுகளை மூடாமலும் மறந்து சென்று விடுகின்றனர். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணத்தை வங்கியில் வைக்காமல் வீட்டில் வைப்பது பாதுகாப்பற்றது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.
இதுபோன்ற காரணங்களை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக்கி, ஆட்கள் இல்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபடுகின்றனர். ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டை தடுக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் தெருக்களிலும், அதேபோல் வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் தாங்கள் கடை மற்றும் வீடு, அலுவலகங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். திருட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் போலீசாரின் அறிவுரைகளை மதித்து கடைபிடிக்க வேண்டும், என்றார்.
இதேபோல் செங்குந்தபுரம் கிராமம் உள்ளிட்ட 21 வார்டுகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதியழகன் வரவேற்றார். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.
விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது மனைவி சீதா, மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சீதா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தா.பழூர் அருகே ஓடையில் புதைந்திருந்த மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைகுடம் இடையே உள்ள வயல்வெளி பகுதிக்கு அருகில் பாட்டார் ஓடையில் ஒரு பெண் பிணம் புதைந்த நிலையில் இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து அமிர்தராயன்கோட்டை கிராமத்தில் வசித்து வந்த காமாட்சி (வயது 85) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகவும், ஓடையில் பிணமாக கிடந்தது காமாட்சிதான் என்றும் அவரது மகள் சுமதி தெரிவித்தார். உடல் முழுதும் மண்ணில் புதைந்த நிலையில் அவர் அணிந்திருந்த புடவை மட்டும் வெளியே தெரிந்ததால், அது காமாட்சியின் பிணம்தானா? என்பதை போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. மேலும் நேற்று முன்தினம் மாலை இருள் சூழ்ந்து விட்டதால் ஓடையில் இருந்து பிணத்தை வெளியே எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று ஓடையை தோண்டி பிணத்தை வெளியே எடுக்கும் பணி ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் தமிழரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர். பிணம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டாக்டர் ராஜா தலைமையிலான குழுவினர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். காமாட்சியின் உறவினர்கள் பிணத்தின் மீதிருந்த உடைகள் உள்ளிட்டவற்றை கொண்டு அது காமாட்சிதான் என்பதை மீண்டும் உறுதி செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் விசாரணை நடத்தி, அதனை உறுதி செய்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு மூதாட்டி காமாட்சியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கதிரவன் வந்து விசாரணையில் ஈடுபட்டார்.
இறந்த காமாட்சிக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உண்டு. இதில் ஒரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டார். மேலும் காமாட்சி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக விவசாயம் செய்யப்படாமல் இருந்த தனது சிறிய அளவிலான நிலத்தில் இந்த பருவத்தில் உழவு செய்து விவசாயத்தில் ஈடுபடப்போவதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஓடையில் பிணமாக மீட்கப்பட்டதால், அவர் எப்படி இறந்தார்? எதிர்பாராதவிதமாக ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி கிராமம் தர்மபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(வயது 54). இவர் கட்டிட பணிக்கான சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும்(42), ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின்ரோட்டில் உள்ள அழகுமணிகண்டன் என்பவரது வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கட்டிட வேலை செய்த செல்லையா, முதல் மாடியில் இரும்புக் கம்பிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பாக மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக கம்பி பட்டதால், மின்சாரம் பாய்ந்து செல்லையா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கட்டைகளுடன் நின்று அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் செல்லையாவுக்கு அருகில் இருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அரியலூர் அருகே ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் சுபலெட்சுமி(வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது ஸ்கூட்டரில் அரியலூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அரியலூர் உழவர் சந்தையை கடந்து வந்தபோது, பின்னால் வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுபலெட்சுமியின் ஸ்கூட்டர் சேதமடைந்தது.
இதையடுத்து ஸ்கூட்டரை சரி செய்து தரும்படி சுபலெட்சுமி அய்யப்பனிடம் கேட்டுள்ளார். அதற்கு அய்யப்பன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சரி செய்யாதநிலையில் சுபலெட்சுமி அய்யப்பனிடம் தனது ஸ்கூட்டரை சரி செய்து தருமாறு மீண்டும் கேட்டுள்ளார். அப்போது அய்யப்பன், அவரது உறவினர் காமராஜ் ஆகியோர் சேர்ந்து சுபலெட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சுபலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிந்து அய்யப்பன், காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.