என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க கோரிக்கை
அரியலூர் நகரில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க கோரிக்கை
அரியலூர் நகரில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சில ஆண், பெண்கள் சுற்றித்திரிகின்றனர். அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கம்புடன் நகர் முழுவதும் சுற்றி வருகிறார். பஸ் நிலையம், கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் காலை, மாலை இருவேளையும் மிகப்பெரிய கம்புடன் சிலம்பம் விளையாடுவது போல் சாலையின் நடுவே நின்று கொண்டு நடந்து செல்பவர்களை அடிப்பதுபோல் அவர் அருகில் செல்வதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.
இதேபோல் நகர பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர். அவர்களை மீட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
Next Story






