search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருள்"

    • விழுப்புரம் அருகே மூட்டை மூட்டையாக பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் குமாரின் கடை மற்றும் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழக அரசு மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருள்களான குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்டவைகளை விற்ப தற்கு தடை விதித்துள்ளது.  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிக அளவில் விற்பனை நடந்துவருகிறது. இதனைதடுக்கும் விதமாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களை விற்பதை தடுப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பில் அரசு தடை விதித்துள்ள புகையிலை பொருள்களை யாரேனும் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தர விட்டிருந்தார்.  இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் வங்கி வீதி பகுதியில் அரசு தடை விதித்துள்ள புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், விழுப்புரம் மாவட்ட சப்-–இன்ஸ்பெக்டர் திவாகர், தலைமையிலான போலீசார் பிரபாகரன், பழனி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் நல்லான் பிள்ளை பெற்றாள் வங்கி வீதியில்உள்ளகுமார் என்பவரது கடை மற்றும் குடோனில் அரசு தடை விதித்துள்ள குட்கா, பான் மசாலா, கூலிப் போன்ற புகையிலைப் பொருள்கள் மூட்டை மூட்டையாக –அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் சுமார் 27 ஆயிரத்து 520 பாக்கெட்டு–களாக வைத்திருந்த புகையிலை மூட்டைகளை பறி–முதல் செய்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரி–கள் முன்னிலையில் குமாரின் கடை மற்றும் குடோனுக்கு சீல் வைக்கப் பட்டது. மேலும் நல்லான் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் குமாரிடம் புகையிலை பொருட்கள்எப்படி கிடைத்தது? யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார்? என்பது குறித்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×