என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் வெத்தியார்வெட்டு கிராமத்தில் அரசு பள்ளியில் ரூ. 24 லட்சம் மதிப்பில் சற்றுசுவர் கட்டும் பணி நடை பெற்று வருகிறது.
    • திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தாட்கோ மூலம் பள்ளியின் சுற்றி சுவர் அமைக்கும் பணி 24.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை சென்னை தாட்கோ தலைவர் மதிவாணன், மற்றும் திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர். இதில் ஒப்பந்ததாரர் கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தவறான முகவரியில் தபால் வழங்கியதற்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
    • நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நுகர்வோர் பாதுகாப்பு குழு ஒன்றின் தலைவராக இருந்து வருகிறார். இவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி விண்ணப்பம் ஒன்றை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது தகவல் அலுவலருக்கு அனுப்புவதற்காக, அந்த முகவரியை தபால் உறையில் எழுதி, அதனை அரியலூர் தபால் நிலையத்தில், பதிவுத்தபால் மூலம் அனுப்ப தபால் நிலைய எழுத்தரிடம் கொடுத்துள்ளார்.

    இதற்கான சேவை கட்டணமாக ரூ.30 பெற்றுக்கொண்ட தபால் நிலைய எழுத்தர், அதனை கணினியில் பதிவு செய்தபோது அனுப்ப வேண்டிய முகவரியில் திருவாரூர் என்பதற்கு பதிலாக, தஞ்சாவூர் என பதிவு செய்துவிட்டார். மேலும் தபாலை பிரித்து அனுப்பும் நிலையிலும் தவறு ஏற்பட்டு, அந்த தபால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் சூப்பிரண்டு அலுவலகத்தில் தபால்காரரால் வழங்கப்பட்டு விட்டது.

    இதையடுத்து அந்த தபால் தவறான முகவரியில் வழங்கப்பட்டு விட்டது என்பதை, தபால் துறையில் இருந்து வரப்பெற்ற ஒப்புதல் அட்டையில் உள்ள அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலக முத்திரை மூலம் தெரிந்து கொண்ட பாலசுப்பிரமணியன், இது குறித்து தபால் நிலைய அதிகாரிக்கு அறிவிப்பு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர், இது பற்றி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், சம்பந்தப்பட்ட தபால் நிலைய அலுவலர், தபாலை பதிவு செய்த எழுத்தர் மற்றும் தபால்காரர் ஆகியோர் கூட்டாக ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக புகார்தாரர் பாலசுப்பிரமணியனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
    • விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு

     அரியலூர்:

    அரியலூர் மாவட்ட மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்தனர். இதில் குழுமூரை சேர்ந்த விவசாயியான வேலாயுதம் அளித்த மனுவில், எனது நிலத்தில் அனுமதியின்றி 2 மின் கம்பங்களை நட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. எனவே மின்கம்பங்களை அகற்றுவதோடு, தவறான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    காசாங்கோட்டையை சேர்ந்த மதியழகன் அளித்த மனுவில், என்னுடைய விவசாய மின் இணைப்புக்கு பகலில் 12 மணி நேரத்திற்கு பதிலாக 6 மணி நேரம் மட்டுமே முன்முனை மின்சாரம் கிடைக்கிறது. சரியான முறையில் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விளாங்குடி சமூக ஆர்வலர் தியாகராஜன் அளித்த மனுவில், தேளூர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகளை ஏரியின் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் செயற்பொறியாளர் அறையில் இடநெருக்கடியுடன் கூட்டம் நடப்பதாகவும், அதை தவிர்த்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் கூட்டரங்கு போன்ற இடத்தில் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ஸ்ரீபுரந்தானை சேர்ந்த விவசாய பிரதிநிதி பாண்டியன் அளித்த மனுவில், மாவட்டத்தில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அரியலூர் செயற் பொறியாளர் அய்யனார், பெரம்பலூர் செயற்பொறியாளர்(பொது) சேகர், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்."

    • கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போட்டத்தில் ஈடுபட முயற்றனர்.
    • போலீசார் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    அரியலூர்:

    சின்னசேலம் பள்ளி சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ெஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரில் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ெஜயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கல்லூரிக்குச் சென்ற போலீசார், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவா்கள் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வகுப்புகளுக்குச் சென்றனா். அப்போது, கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, துணை முதல்வா் ராஜமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள் உடனிருந்தனா்."

    • பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரியலூர்:

    திருமானூரில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 13 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் நிலையம் திட்டங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டு, தற்போது அத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. இதனை வரவேற்பதோடு, இதனால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் பன்றிகள் மற்றும் வளர்ப்பு கால்நடைகள் சாலையில் படுத்துக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்வதோடு, அதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்று வருவதற்கும் காரணமாக உள்ளது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரியலூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் கொடுத்த ஏழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் பெரும் காற்று மாசுபாடு ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திருமானூர் கிழக்கு மண்டல தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்."

    • தேசிய நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் உள்ளவர்கள் விவசாய நிலங்களுக்கு மூலப்பொருள் எடுத்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சோழங்குறிச்சி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சோழங்குறிச்சி, அழிசுகுடி, பருக்கல், வாத்திகுடிகாடு, காக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக உடையார்பாளையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அணுகுசாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சோழங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் 11, 12, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சோழங்குறிச்சி சாலை அருகே உள்ள மயானத்திற்கு, இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல அருகே உள்ள தெருக்கள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையத்தில் இருந்து சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் வருகிற 25-ந் தேதியன்று உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    • நிலத்தை மீட்டுத்தர கோரி பெண் தீக்குளிக்க முயன்றார்.
    • கோரிக்கை மனுவை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதிடம் அளித்தார்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லுரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி செல்வம். தற்போது இவர் அங்கராயநல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர், கேனில் வைத்திருந்த மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

    இதைப்பார்த்த போலீசார் அவர் மீது தண்ணிரை ஊற்றி காப்பற்றி, கோரிக்கை குறித்து கேட்டறிந்தனர். அதற்கு செல்வம் தெரிவிக்கையில், எனது தந்தை சிதம்பரம், கடந்த 2011 ஆம் ஆண்டு, வாணத்தி ரையன்பட்டினத்தில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை பொன்பரப்பியைச் சேர்ந்த அலெக்சாண்டர் மனைவி மீனா, உடையார்பாளையம் வெள்ளாழத்தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி தங்கம், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் ,திருச்சி மாவட்டம், கிளியநல்லூரைச் சேர்ந்த ராஜப்பன் மகன் சிவா ஆகியோருக்கு பாத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

    இந்த நிலத்தை வாங்கிய அனைத்து நபர்கள் மீது கடந்த 2012 முதல் சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கு.வல்லத்தை சேர்ந்த தமிழர் தேசியக் கட்சி தலைவர் சுபா.இளவரசன் தனது 30 அடியாட்கள் மற்றும் ஜேசிபி எந்திரத்துடன் வந்து எனங்களது நிலத்தை அபகரித்து, பிளாட் போட முயன்றார்.

    இதனை தடுக்க முயன்ற எனது கணவரையும், என்னையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, செல்வம் தனது கோரிக்கை மனுவை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதிடம் அளித்தார். கோரிக்கையை பரீசிலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

    • பாதுகாப்பற்ற கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

    அரியலூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள தைத்தொடர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு, தற்போது சுமார் 1,32,000 கன அடிக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

    எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகளவு வரும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள்; பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும். பாலங்களைத் தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் எனவும் பொதுமக்களை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேராசிரியர் குழுவை கண்டித்து நடைபெற்றது

    அரியலூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 14 -ம் தேதி நடைபெற்ற பருவத்தேர்வில், முதுகலை வரலாறு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எவை என்று கேட்கப்பட்டிருந்தது. இதை கண்டித்தும், மாணவர்கள் இடையே சாதி உணர்வை தூண்டும் பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் வினாத்தாளில் தொடர்பில்லாத வார்த்தையை உருவாக்கிய பேராசிரியர் குழுவை கண்டித்தும், பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் தொடர்புடைய அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் கண்டன உரையாற்றினார். பட்டியலின மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • ஆனந்தவாடி கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும்

    அரியலூர்:

    அரிலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்க பயன்பாட்டுக்காக நிலம் கொடுத்த ஆனந்தவாடி கிராம மக்களுக்கு உத்தரவாதம் அளித்தபடி, ஆலையில் இதுவரை நிரந்தர பணி வழங்கவில்லை. எனவே நிலம் கொடுத்த எங்களுக்கு ஆலையில் வேலை வழங்காவிட்டால், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அரசிடமே ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் கருப்புசாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்று மணலில் இறங்கி நடந்து சென்ற போது, மணலில் புதைந்த நிலையில் கல் ஒன்று தென்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, சிலை போல தெரிந்துள்ளது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து, சிலையை முழுமையாக தோண்டி எடுத்தனர். அது ஒரு கை உடைந்த நிலையில் 2.5 அடி உயரம் கொண்ட கருப்புசாமி கற்சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிலை அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவிலில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் வந்து கருப்புசாமியை வழிபட்டு செல்கின்றனர்.

    • கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ செல்ல வேண்டாம்.
    • பாலங்களை தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும்.

    அரியலூர்:

    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம். மேலும் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகளவு வரும் என்பதால் அந்த பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகளை விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும். பாலங்களை தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் விக்கிரமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச்செல்வதால் கரையோர பகுதிகளான முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது உள்ளிட்டவற்றுக்காக செல்லக்கூடாது, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் நேற்று காலை அந்தந்த ஊராட்சிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் விக்கிரமங்கலம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×