என் மலர்tooltip icon

    அரியலூர்

    • 200 ஏக்கர் வயல்களுக்குள் கொள்ளிடம் தண்ணீர் புகுந்தது
    • மதகு சீரமைக்கப்படாததால் ஏற்பட்டது

    அரியலூர்:

    காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரண மாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி அருகே கருப்பூரில் கொள்ளி டம் ஆற்றில் உள்ள 7-ம் கண் மதகில் சேதமநை்துள்ள நீ தேக்கும் கதவுகள் சரியாக சீரமைக்கப்படாததால் ஆற்றுநீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்க ளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக கோடாலி கருப்பூர் கிராமத்தில் 150 ஏக்கர் பகுதி வயல்கள், 50 ஏக்கர் குறுவை சாகுபடி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. இதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதநை்துள்ளனர்.

    கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் திற க்கப்பட வுள்ளது தெரிந்திரு ந்தும் அதிகாரிகள் 7-ம் கண் மதகை முன்கூட்டியே சீரமைக்கா மல் மெத்த னமாக இருந்ததே தற்போது பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்த அனைத்து பயிர்களையும் கணக்கெடுத்து உரிய இழ ப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

    • பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.
    • திருச்சி வருவாய் மாவட்டம் சம்மந்தப்பட்ட லால்குடி, புள்ளம்பாடி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய நான்று சார்பதிவகங்கள் திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    அரியலூர்:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 06.09.2021 அன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக்கோரிக்கையின் போது பதிவுத்துறையில் சில சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சில வருவாய் கிராமங்கள் வேறு வருவாய் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நிலை உள்ளது.

    பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது. எனவே, வருவாய் கிராமங்கள் முழுவதும் ஒரே வருவாய் மாவட்ட ஆட்சி எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    அரியலூர் பதிவு மாவட்டத்தை பொறுத்து, அரியலூர் பதிவு மாவட்ட எல்லையில், திருச்சி வருவாய் மாவட்டம் சம்மந்தப்பட்ட லால்குடி, புள்ளம்பாடி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய நான்று சார்பதிவகங்கள் திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகம், திருச்சி மாவட்டப்பதிவாளர் அலுவலகம், அரியலூர் சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 27.07.2022 பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரணஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் சரவண பெருமாளுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.
    • வருமான வரித்துறை சோதனையால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செந்துறை:

    மதுரை கோச்சடை விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள் மற்றும் சரவணப் பெருமாள். இவர்களுக்கு சொந்தமான ஆர்.ஆர். இன்ப்ரோ கட்டுமான நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி சாலையில் இவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது. அதன் பின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு சொந்தமான கிளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

    இதன் மீது விசாரணை நடத்த இருப்பதால் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் சரவண பெருமாளுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரி கடந்த ஓராண்டாக செயல்படாமல் உள்ளது. இந்த குவாரியில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி அம்பேத்கார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த பதிவேடு உள்பட அனைத்து ஆவணங்களையும் சோதனையிட்டனர்.

    8 மணி நேரம் நடந்த இந்த சோதனையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று கைப்பற்றப்பட்டு ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால் தேனியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு அறநிலைத்துறை சார்பாக பராமரித்து வருகின்றனர்.
    • ஆடி திருவாதிரை அரசு விழாவாக 2022 கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தாசில்தார் ஸ்ரீதர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிக பிரசித்தி பெற்ற வரலாறு சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு அறநிலைத்துறை சார்பாக பராமரித்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோவிலில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை அரசு விழாவாக 2022 கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தாசில்தார் ஸ்ரீதர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது.
    • மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

    அரியலூர்:

    சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அரியலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, அதன் விசாரணை நாள் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 250 வழக்குகளை விரைந்து விசாரணை மேற்கோண்டு, தீர்ப்பு வழங்குவதற்காக, அந்த வழக்குகள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளுக்கு விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆணையத்தில் உள்ள நாட்குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லது நுகர்வோர் ஆணையகளுக்கான இணையதளத்தின் மூலம் வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

    இந்த வழக்குகளை நடத்துவதற்கு புகார்தாரர்களும், எதிர்தரப்பினரும் வழக்குரைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது. தொடங்கப்படும் மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் வழக்குகளை சமரச மையத்தின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் ஒன்றிய குழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில் நடை பெற்றது.
    • ஒன்றிய குழு கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் ஒன்றிய குழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில், ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் யூனியன் கமிஷனர் குணசேகரன், ஸ்ரீதேவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி, பாப்பா, சரவணன், ராணி, செந்தமிழ்செல்வி, முருகேசன், சுந்தரவடிவேலு, கண்ணகி, ரேவதி, ராதாகிருஷ்ணவேணி, விஜயகுமார், அலுவலக மேலாளர் ஆனந்தன், ஒன்றிய பொறியாளர் கண்ணன், கணக்காளர் ராஜீவ்காந்தி, இளநிலை உதவியாளர் மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய குழு கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

    அரியலூர்:

    மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்துக்கு ஜூலை 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவி–த்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை உலக பிரதான பாரம்பரிய சின்னமாக யுனோஸ்கோ அறிவித்து, அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்தை கட்டிய மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு இவ்விழாவை தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த தமிழக அரசு அரசாரணை வெளியிட்டது.

    அதன்படி வரும் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால்,

    அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவேஅரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடை பெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 06.08.2022 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக ஆணையிடப்பட்டுள்ளது.

    விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாரண, சாரணியர் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • நல்ல பண்புகளை மாணவர்கள் பெற முடியும்

    அரியலூர்:

    உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் உஷா முத்துக்குமரன், பள்ளியின் முதல்வர் தனலட்சுமி, இயக்கத்தின் உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ேடார் முன்னிலை வகித்தனர். உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி துணை ஆய்வாளர் பேசுகையில், அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் நல்ல முறையில் செயல்பட வேண்டும். சாரண இயக்கத்தால் மாணவ, மாணவிகள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வதால் தன்னம்பிக்கை, சகோதரத்துவம், பிறருக்கு உதவி செய்தல், தனக்கு வேண்டியவற்றை தானே செய்து கொள்ளும் திறன் போன்ற பல்வேறு நல்ல பண்புகளை மாணவர்கள் பெற முடியும் என்றார். முன்னதாக உடையார்பாளையம் கல்வி மாவட்ட தலைமையிடத்து ஆணையர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். முடிவில் அமைப்பு ஆணையர் முரளிதரன் நன்றி கூறினார்."

    • ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.
    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது

    அரியலூர்:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒற்றுமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூரில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. திருச்சி முதுநிலை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் ராமகிருஷ்ணன் உத்தரவின்படி, அரியலூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஓட்டத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலை, செந்துறை சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் நாட்டின் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ெரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்."

    • மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்றார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் புஷ்பராஜ் (வயது 32). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாய வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று புஷ்பராஜ் நடுவலூர் நால்ரோடு பகுதியில் இருந்து கார்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். எதிரே கார்குடி காலனி தெருவை சேர்ந்த கண்ணன்(45) என்பவர் சாலையோரத்தில் நடந்து வந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக புஷ்பராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கண்ணன் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதில் புஷ்பராஜ் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 8400 கி.மீ. சைக்கிள் பயணம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகன் வினோத் (வயது18), இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். சூரியமணல் கிராமத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ரவி மகன் ராசு (20) இவர் டிப்ளமோ முடித்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஜூன் 1-ந் தேதி ஜெயங்கொண்டத்திலிருந்து காஷ்மீர் லடாக் பகுதிக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஜூன்31-ந் தேதி லடாக்கை சென்றடைந்து, எல்லை பகுதியில் ஒரு நாள் தங்கினர். ஜூலை 2-ந் தேதி அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு, நேற்று ஜெயங்கொண்டத்தை வந்தடைந்தனர். 8400 கி.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களை பொதுமக்கள், காவல் துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அய்யனார் குளத்திற்கு வரும் நீர் வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுத்தனர்.
    • சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம்

    அரியலூர்:

    திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் தனியார் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமை வகித்தார், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலை திருநாவுக்கரசு தீர்மானங்களை வாசித்தார்

    கூட்டத்தில் திருமானூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு நடைபாதை பூங்கா அமைத்து தர வேண்டும். திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல வருடமாக பாழடைந்து பழுதாக இருக்கும் ஜெனரேட்டரை சரி செய்வதுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனை ஆக்க வேண்டும்.

    திருமானூர் மின் நிலையத்தில் மின்சாரம் இல்லாத போது பணம் கட்ட முடியாத நிலை அமைந்துள்ளது. இதற்காக ஜெனரேட்டர் பேட்டரி இன்வெர்ட்டர் உடனடியாக சரி செய்ய வேண்டும். திருமானூரிலிருந்து அண்ணி மங்கலம் செல்லும் கொள்ளிடக்கறையில் பனை மரங்கள் பட்டு போய் கீழே விழும் அபாயம் இருப்பதால் பட்டுப்போன மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். திருவெங்கனூர் அய்யனார் குளத்தில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றுவதோடு கண்டிராதித்தும் பேரேரியில் இருந்து திருவேங்கனூர் அய்யனார் குலத்திற்கு வரும் நீர் வாய்க்கால் தூர் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை அமைந்துள்ளது எனவே வாய்க்கால்களை தூர்வார வேண்டும் திருமானூர் ஒன்றிய ஊராட்சி மன்றங்களில் 100 நாள் வேலை திட்டம் சரிவர செய்து கொடுக்க வேண்டும் மேலும் திருமானூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைத்துத் தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயபால் பாஸ்கரன் மற்றும் கிருஷ்ணன் போன்ற சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×