என் மலர்
உள்ளூர் செய்திகள்

அய்யனார் குளத்திற்கு வரும் நீர் வாய்க்காலை தூர்வார கோரிக்கை
- அய்யனார் குளத்திற்கு வரும் நீர் வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுத்தனர்.
- சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம்
அரியலூர்:
திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் தனியார் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமை வகித்தார், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலை திருநாவுக்கரசு தீர்மானங்களை வாசித்தார்
கூட்டத்தில் திருமானூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு நடைபாதை பூங்கா அமைத்து தர வேண்டும். திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல வருடமாக பாழடைந்து பழுதாக இருக்கும் ஜெனரேட்டரை சரி செய்வதுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனை ஆக்க வேண்டும்.
திருமானூர் மின் நிலையத்தில் மின்சாரம் இல்லாத போது பணம் கட்ட முடியாத நிலை அமைந்துள்ளது. இதற்காக ஜெனரேட்டர் பேட்டரி இன்வெர்ட்டர் உடனடியாக சரி செய்ய வேண்டும். திருமானூரிலிருந்து அண்ணி மங்கலம் செல்லும் கொள்ளிடக்கறையில் பனை மரங்கள் பட்டு போய் கீழே விழும் அபாயம் இருப்பதால் பட்டுப்போன மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். திருவெங்கனூர் அய்யனார் குளத்தில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றுவதோடு கண்டிராதித்தும் பேரேரியில் இருந்து திருவேங்கனூர் அய்யனார் குலத்திற்கு வரும் நீர் வாய்க்கால் தூர் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை அமைந்துள்ளது எனவே வாய்க்கால்களை தூர்வார வேண்டும் திருமானூர் ஒன்றிய ஊராட்சி மன்றங்களில் 100 நாள் வேலை திட்டம் சரிவர செய்து கொடுக்க வேண்டும் மேலும் திருமானூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைத்துத் தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயபால் பாஸ்கரன் மற்றும் கிருஷ்ணன் போன்ற சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






