என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சொட்டுநீர் பாசன கருவிகள் அமைக்க ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் விசுவநாதன், தங்கதர்மராஜ், செங்கமுத்து, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், கருப்பையா, பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்,

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பேசும் போது, மானிய விலையில் நுண்ணீர் பாசனத் திட்டம்: தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் சமீபத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள 1894 விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் (அ) தெளிப்பு நீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் இணைத்துக்கொண்டு பயன்பெற்றிட தெரிவிககப்படுகிறது என்றார்.

    • பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • காதர்மொய்தீனின் இரு சக்கர வாகனமும், எதிரே மூன்று பேர் வந்த ஒரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன் (50). பிற்பகல் இவர், தனது மகன் ஷேக்அப்துல்லா நசீர் இஸ்காக் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்ற போது, இவரது இரு சக்கர வாகனமும், எதிரே மூன்று பேர் வந்த ஒரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த காதர்மொய்தீன், எதிரே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஆங்கியனூர், மேலத்தெருவைச் சேர்ந்த வல்லரசு (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பலத்த காயமடைந்த ஷேக் அப்துல்லா நசீர் இஸ்காக், எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆங்கியனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சரவணவேல் (16), ராமநாதபுரம் மாவட்டம், தூத்து வலசை, உச்சிகுழிதெருவைச் சேர்ந்த சந்துரு (15) ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • கஞ்சா விற்றவர் கைது செய்யப்படார்
    • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி உட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    அதன் அடிப்படையில் நேற்றிரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் கோகுல்ராஜ் மற்றும் சிலர் கோழி பண்ணை அருகே கஞ்சாவை விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து, அவர்களிடமிருந்த ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பிறகு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும்.
    • டெல்டா பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிக்கப்படுவதால், அப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெல், மக்காச்சோளம், கம்பு, கடலை முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும். டெல்டா பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிக்கப்படுவதால், அப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெல், மக்காச்சோளம், கம்பு, கடலை முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    எனவே மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் யூரியா, டிஏபி, பொட்டாசியம் போன்ற உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.2020-2021 ஆண்டில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை பெற்று தரவேண்டும். குறுவை தொகுப்பு வழங்கும் காலத்தை நீடிப்பு செய்ய வேண்டும். மக்காச்சோளம், பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடந்தது
    • 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.இதில் வெற்றிபெறும் 18 நபர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகிறார்கள்

    போட்டியினை பள்ளி தலைமையாசிரியர் பி.கலைச்செல்வி மற்றும் கணக்கு பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் முன்னின்று நடத்தினர். இங்கு வெற்றிப்பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வட்டார அளவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை போல் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் வாழ்த்தினர்.

    • உலக மக்கள்தொகை தின உறுதிமொழி பேரணி நடந்தது
    • சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழியுடன் பேரணி நடத்தப்பட்டது

    பேரணியில் காலை 8:30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அதனை தொடர்ந்து சுகாதார நிலையம் முன்பு புற நோயாளிகளுடன் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் பின்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து திருமானூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரை மாணவர்கள் மருத்துவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சுகாதார மேற்பார்வையாளர்கள் போன்றோர் பேரணையாக நடந்து சென்று மக்கள் தொகை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் சிந்துஜா மருத்துவர் முன்னிலை வகித்தார் சுகாதார மேற்பார்வையாளர் வகில். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் தமயந்தி உமா .சீதாராமன். நரேந்திரன். கருப்பண்ணன். ஜோயல். விவின் போன்ற சுகாதார நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர் பேரணிக்கு திருமானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் செல்போன் ஆப்பை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு மாணவிகளுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் ஆப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு விளக்கமளித்தார்.

    • வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    அரியலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் ஜெயம்கொண்டம் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் ஆலோசனைப்படி மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

    உடையார்பாளையம் வருவாய் அலுவலர் பரிமளம் முன்னிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அதிக அளவில் வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் அந்த இடத்தில் இருந்து விரைந்து வெளியேறுவதற்கு ஏதுவாகவும் அவர்களுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் மீட்பு பணி குழுவினர் ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது போன்றவற்றிற்கான செயல்முறை விளக்கத்துடன் போலி ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி நடத்திக் காண்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்களில் 6பி – படிவம் சமர்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம் பெற்றுள்ளதா அல்லது ஒரே வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறியவும், வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இப்பணியானது வருகிற 01.08.2022 முதல் தொடங்கப்பட உள்ளது. வாக்காளர் தன்விருப்பதின் அடிப்படையில் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்தி இணைய வழியில் 6பி படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம்.

    அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக இப்பணிக்கு வரும்போது தன்விருப்பதின் அடிப்படையில் படிவம் 6பி யினை பூர்த்தி செய்து சமர்பித்தும் அல்லது இது தொடர்பாக நடைபெற உள்ள சிறப்பு முகாம்களிலும் 6பி – படிவம் சமர்பித்தும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர் அனைவரும் தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மகா மாரியம்மன் கோவில் அம்மன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உண்டியல் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள புக்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சிந்தனைச்செல்வன் சென்று உள்ளார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்றபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தாலி குண்டு, சன்னதிக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கோவில் முன்பு கூடினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பருக்கல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 26), தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (17) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வரதராஜன் பேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மார்க்கரேட் அல்போன்ஸ் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் முன்னிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா. சொ. கா. கண்ணன் தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் சுகாதார அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றினர் இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவை பெற்று பயனடைந்தனர்.

    அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பிரசவ வார்டுகளை ஆய்வு மேற்கொண்டார். வரதராஜம்பேட்டை பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்களை சந்தித்து பேரூராட்சியில் உள்ள குறைகளை கேட்டு அறிந்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளிட பாலத்தில் மண் குவியலை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.
    • விபத்து ஏற்பட உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கொள்ளிட பாலத்தில் மண் குவியல் இரண்டு பக்கங்களிலும் அதிகமாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் நிலைஉள்ளது. எனவே இரண்டு பக்கங்களிலும் உள்ள மண் குளியலை அகற்ற பொதுமக்கள் சமுக ஆர்வவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதில் 1.3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்க 24 தூண்கள் உள்ளன. இதில் இரண்டு தூண்களுக்கும் நடுவில் இணைக்கும் வகையில் ரப்பர் பொருத்தப்பட்டது. தஞ்சை மாவட்டதை இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகிறது.

    இந்த பாலத்தில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இப்பாலத்தின் இருபுறங்களிலும் மண் குவிந்து கிடக்கின்றன. இது காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயணிகளின் கண்களில் வந்து கொட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.

    தற்போது ஆற்றில் மேட்டூரில் இருந்து உபரி நீரை திறந்து விடப்பட்டதால் ஆறு முழுவதும் நீர் நிரம்பி செல்கிறது. இதை காண பொதுமக்கள் வெளியூர் செல்லும் மக்கள் நின்று கண்டு களித்து செல்கின்றனர். எனவே பாலத்தில் இருபுறமும் மண்மேடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×