என் மலர்
நீங்கள் தேடியது "7.92 CRORE"
- சொட்டுநீர் பாசன கருவிகள் அமைக்க ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்:
அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் விசுவநாதன், தங்கதர்மராஜ், செங்கமுத்து, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், கருப்பையா, பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பேசும் போது, மானிய விலையில் நுண்ணீர் பாசனத் திட்டம்: தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் சமீபத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள 1894 விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் (அ) தெளிப்பு நீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் இணைத்துக்கொண்டு பயன்பெற்றிட தெரிவிககப்படுகிறது என்றார்.






