என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    மின் கட்டண உயர்வை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும்.
    • டெல்டா பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிக்கப்படுவதால், அப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெல், மக்காச்சோளம், கம்பு, கடலை முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும். டெல்டா பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிக்கப்படுவதால், அப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெல், மக்காச்சோளம், கம்பு, கடலை முருங்கை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    எனவே மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் யூரியா, டிஏபி, பொட்டாசியம் போன்ற உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.2020-2021 ஆண்டில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை பெற்று தரவேண்டும். குறுவை தொகுப்பு வழங்கும் காலத்தை நீடிப்பு செய்ய வேண்டும். மக்காச்சோளம், பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×