ஜெயங்கொண்டத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொது மக்களை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி

வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொது மக்களை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி
Published on

அரியலூர்:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் ஜெயம்கொண்டம் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் ஆலோசனைப்படி மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

உடையார்பாளையம் வருவாய் அலுவலர் பரிமளம் முன்னிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அதிக அளவில் வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அந்த இடத்தில் இருந்து விரைந்து வெளியேறுவதற்கு ஏதுவாகவும் அவர்களுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் மீட்பு பணி குழுவினர் ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது போன்றவற்றிற்கான செயல்முறை விளக்கத்துடன் போலி ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி நடத்திக் காண்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com