என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போட்டத்தில் ஈடுபட முயற்சி
- கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போட்டத்தில் ஈடுபட முயற்றனர்.
- போலீசார் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அரியலூர்:
சின்னசேலம் பள்ளி சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ெஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரில் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ெஜயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கல்லூரிக்குச் சென்ற போலீசார், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவா்கள் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வகுப்புகளுக்குச் சென்றனா். அப்போது, கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, துணை முதல்வா் ராஜமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள் உடனிருந்தனா்."
Next Story






