என் மலர்tooltip icon

    அரியலூர்

    • கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை தொடக்கம்
    • பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தல்

    அரியலூர்:

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் சிமென்ட் விற்பனை தொடங்கியது.

    அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் மற்றும் உட்கோட்டை, ஆதனக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இம்முகாமுக்கு தலைமை வகித்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ம.தீபாசங்கரி, புதியதாக சிமென்ட் விற்பனையை தொடக்கி வைத்து, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், துணை பதிவாளர் அறப்பளி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் இளஞ்செழியன் மற்றும் கூட்டுறவு சார்பதிவா ளர்கள், சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • வட்டார வள மையம் சார்பில் நடைபெற்றது

    அரியலூர்:

    வரும் டிச.3 -ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாற்றுத்தினாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் முக்கிய வத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டிச.3 -ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அதன் ஒரு பகுதியாக அரியலூரில் வட்டார வள மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜப்பிரியன் கொடியசைத்து வைத்தார். பேரணியானது பிரதான கடை வீதி, பேருந்து நிலையம் வழியாகச் சென்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறை வடைந்தது.

    பேரணியில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிதுரை, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் திருமானூர், இலையூர், நாகமங்கலம், ெஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    • பள்ளிக்கு வந்த மாணவி மாயமானதால் பரபரப்பு
    • பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக தகவல் வந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் செந்துறை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வழக்கம் போல் காலை நேரம் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு வந்தவர் பள்ளியில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இந்த நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது பள்ளிக்கு வந்த மாணவி புத்தக பையை பள்ளிகளில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பள்ளியை முற்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆங்காங்கே உள்ள செக் போஸ்ட்கள் மற்றும் ரோந்து போலீசாரை முடிகிவிட்டார். மாயமான பள்ளி மாணவி கண்டுபிடிக்கும் பணியில் உறவினர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவி செந்துறை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பள்ளிக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவியை அவரது ஆட்டோவில் ஏற்றி வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். அப்போது அந்த மாணவியிடம் விசாரித்த போது தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்பதால் மாயமாகியதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மாணவிக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். இதனால் செந்துறை பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    • புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த ராஜா சோமசுந்தரம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்."

    • பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் நகர தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன் குமார், மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் அபிராமி, அரியலூர் ஒன்றிய தலைவர்கள் பழனிச்சாமி (தெற்கு), தங்கவேல் (வடக்கு), உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

    இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழுர், உடையார்பாளையம், விக்கிரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • ளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 2 மற்றும் 10-வது வார்டுகளை இணைக்கும் வகையில் உள்ள பலத்தான்குளத்தை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்த குளத்தில் குளிப்பது, துணிகள் துவைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆகாயத்தாமரை செடி குளத்தைச் சுற்றி படர்ந்து வளர்ந்து கிடக்கிறது. இதனால் குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருவதோடு தொற்று நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

    மேலும் அந்த குளத்திலிருந்து பாம்புகள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் அருகில் உள்ள வீட்டின் உள்ளே வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஒரு வருடம் காலமாக அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு கூட மிக சிரமப்பட்டு வருகின்றனர்.

    தற்போது வெற்றி பெற்ற ஜெயங்கொண்டம் நகராட்சித் தலைவர் சுமதி சிவக்குமாரிடம் அந்தப் பகுதி தி.மு.க. கவுன்சிலர் வெற்றி செல்வன் பலமுறை மனு அளித்தும் நேரில் சென்று தெரிவித்தும் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

    நகராட்சி நிர்வாகம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தராததால் அந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக அதனை அகற்றி வருகின்றனர். எனவே இந்த குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    • 6 மாதங்களாக எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது
    • சாலையோரம் பிணங்களை எரிப்பதால் அச்சம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் பொதுவான வகையில் எரிவாயு மின் தகன மேடை சென்ற ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இங்கு இறந்த நபரை தகனம் செய்ய ரூ.3000 என நகராட்சி மூலம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக இந்த எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் பிணங்களை எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் அந்த வழியாக சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் புகை மூட்டமாக இருப்பதால் சிரமம் அடைகிறார்கள். மேலும் பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சுடுகாட்டின் அருகிலேயே அரசு கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் வகுப்பறையில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக புகார் தெரிவித்துள்ளதோடு இந்த சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    • வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவில் மழைநீர் வடிவதில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் வடிகால் வசதி செய்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ஏற்கனவே அந்த இடத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாகவும், வடிகால் ஏற்படுத்தும் இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டிய நிலை உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

    இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது."

    • விவசாயியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • நிலம் சம்பந்தமான பிரச்சினை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 52). விவசாயியான இவருக்கும், சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த சசிகுமாருக்கும்(40) இடையே நிலம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலசுப்பிரமணியத்தின் தந்தை கணேசன் பெயரில் உள்ள தோட்டத்தில் சசிகுமார் பயிர் செய்ததாகவும், இது குறித்து பாலசுப்பிரமணியம் சசிகுமாரிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சசிகுமார், அவரது மனைவி கனகவல்லி, தம்பி இளையராஜா ஆகியோர் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    • நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். இதில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ரெத்தினகுமார்(வயது 29), விளாகம் கிராமத்தை சேர்ந்த பாப்புராஜ்(29) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வேட்டையாட பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • போர்வெல் லாரியில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயின
    • சி.சி.டி.வி. காமிரா காட்சி மூலம் 3 பேர் சிக்கினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் விஜயகுமார் என்பவர் மூன்று வருடங்களாக போர்வெல் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் போர்வெல் கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து போர் போடும் இரும்பு ராடுகளை சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள 6 ராடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    காலையில் கடை உரிமையாளர் விஜயகுமார் வந்து பார்த்தபோது திருடு போனது அதிர்ச்சி அடைந்த அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது டாட்டா ஏசி வாகனத்தில் திருடி செல்வது தெரியவந்துள்ளது.

    ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியா இளங்கோவன் மற்றும் பாஸ்கர் மொய்சன் ஆகியோர் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் போர்வெல் லாரியில் திருடியவர்கள் ஜெயங்கொண்டம் கீழ தெரு பகுதியைச் சேர்ந்த விஜய், அன்புச்செல்வன், குடியரசன் ஆகியவர்கள் என தெரியவந்தது. மூன்று பேரையும் பிடித்து இரும்பு ராடுகள், டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • நண்பரை பார்த்து விட்டு சென்ற போது சம்பவம்

    அரியலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் திரவுபதி அம்மன் ே காவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 42). இவர் தா.பழூரில் உள்ள நணபர் சந்தோஷ்குமாரை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அவரை பார்த்த பின்னர் மீண்டும் த ா.பழூரில் இருந்து சிதம்பரம் நோக்கி க ாரில் புறப்பட்டு சென்றார். கோடங்குடி அணைக்குடம் இடையே வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் சென்ற போது கார் திடீரென் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பாலமுருகன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி உயிர் தப்பினார். சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் தா.பழூர் ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் வனப்பகுதி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×