என் மலர்
உள்ளூர் செய்திகள்

போர்வெல் லாரியில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
- போர்வெல் லாரியில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயின
- சி.சி.டி.வி. காமிரா காட்சி மூலம் 3 பேர் சிக்கினர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் விஜயகுமார் என்பவர் மூன்று வருடங்களாக போர்வெல் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் போர்வெல் கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து போர் போடும் இரும்பு ராடுகளை சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள 6 ராடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
காலையில் கடை உரிமையாளர் விஜயகுமார் வந்து பார்த்தபோது திருடு போனது அதிர்ச்சி அடைந்த அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது டாட்டா ஏசி வாகனத்தில் திருடி செல்வது தெரியவந்துள்ளது.
ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியா இளங்கோவன் மற்றும் பாஸ்கர் மொய்சன் ஆகியோர் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் போர்வெல் லாரியில் திருடியவர்கள் ஜெயங்கொண்டம் கீழ தெரு பகுதியைச் சேர்ந்த விஜய், அன்புச்செல்வன், குடியரசன் ஆகியவர்கள் என தெரியவந்தது. மூன்று பேரையும் பிடித்து இரும்பு ராடுகள், டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.






