என் மலர்
அரியலூர்
- ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்காக முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில நடைபெற்ற முகாமை சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். ஒன்றியக் குழுத் தலைவர் ந.ரவிசங்கர், துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளரச்சி அலுவலர்கள் பிரபாகரன், அமிர்தலிங்கம் ஆகியோர முன்னிலை வகித்தனர். வட்டார தலைமை மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு, ஊராட்சி அனைத்து நிலை பணியாளர்களின் உடலை பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
- ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது
- அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தர தீர்மானம்
அரியலூர்:
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டரங்கில் 21 வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சாவித்திரி பல்வேறு தீர்மானங்களை வாசித்து பேசினார். மேலும் அனைத்து வாடுகளிலும் உள்ள கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை முக்கிய பணிகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆணையர் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 134 நபருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வலியுறுத்தப்பட்டது
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன். தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 43 வகையான திட்டங்கள் குறித்தும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நடைபெறும் பணிகள், முடிவுற்ற பணிகள், பயனாளிகளின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு செய்து, அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெறுவதுடன், அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் எஸ்.முருகண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ம.தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மு.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
- சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரங்களில் ஏராளமான மதுபிரியர்கள் பல்வேறு இடங்களில் இருந்து படையெடுத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது யாரோ மர்மநபர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்து இந்த பகுதிக்கு கொண்டு எரிக்க முயற்சி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இறந்து கிடந்தவரின் சட்டை பகுதி எரிந்த நிலையில் இருந்தது. எனவே கொலை செய்தவர்கள் அதனை மறைப்பதற்காக கொலையுண்ட நபரின் உடலை எரிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது உறுதியானது. மேலும் அவரது கைகள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களையும் அதிரடியாக திரட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஷ செடியை அரைத்து குடித்த பெண் உயிரிழந்தார்.
- வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை செந்தமிழ்செல்விக்கு வயிற்றுவலி அதிகரிக்கவே தனது வீட்டிற்கு அருகில் இருந்த விஷசெடியை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் செந்தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்தமிழ்செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
- அரியலூர், தேளூர், செந்துறை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பராமரிப்பு முடியும் வரை இருக்காது
அரியலூர்:
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (சனிக்கிழமை) அரியலூர், தேளூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கட கிருஷ்ணாபுரம், அஸ்தினா புரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புது ப்பாளையம், குறிச்சி நத்தம், சிறு வளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணா புரம், ரெங்க சமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி, வி.கை க்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான் குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார் பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணம ங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்ப ட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளி ப்பிரிங்கியம், நெரிஞ்சி க்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லா ண்டகோட்டை.
ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியனர்
- கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி
அரியலூர்:
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அரியலூர் மாவட்ட த்திலுள்ள பல்வேறு கோயிலி களில் ஆயிரம்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்திகை மாதம் முதல் நாளில் இருந்து அரியலூர் பால பிரசன்ன விநாயகர் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதை போல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன கோயிலில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு குருசாமிகள் சந்தன மாலை அணிவித்தனர்.கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி நடைபெற்றது
- அரியலூர் மாவட்ட பூவாணிப்பட்டு அரசுப் பள்ளியில்
அரியலூர்
அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை பெறற்றது.
இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கா.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்து பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில், படிக்கின்ற போதே மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும் போது, வேலைவாய்ப்பு தகுந்த படிப்பினை தேர்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்து ரைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் எம்.வினோத்குமார், சா.மணிமாறன் ஆகியோர் மத்திய, மாநில அரசு பணிகள், தனியார் துறை பணியமர்த்தம் மற்றும் சுயத்தொழில்கள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர்.
முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.பவானி வரவேற்றார்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜராம் நன்றி தெரிவித்தார்.
- அரசு பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது
- மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
அரியலூர்
வரும் 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழகொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்று, வீதிகளில் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், மாற்றுத்திறனாளி உடன் நட்புறவு பாராட்டுவோம், இணைவோம் மகிழ்வோம் என்ற பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வீதிகளில் பேரணியாக கோசமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா தலைமைவகித்தார். ஊராட்சி மன்ற தலைவி செந்தமிழ்ச்செல்வி முன்னிலைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வி, அரசு மருத்துவ ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் அரசி, ராதை ஆகியோர் செய்திருந்தனர்.
- கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
- 384 பசு, 575 வெள்ளாடுகளுக்கு பரிசோதனை
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் அருகே உள்ள மேலவண்ணம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை தாங்கினார். இதில் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்டவை செய்யப்பட்டது. தொடர்ந்து கால்நடை நோய் புலனாய்வு குழுவினர் மூலம் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ரத்தம், சாணம், பால் மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்து நோய் பரிசோதனை செய்தல் போன்ற பரிசோதனைகளும் நடைபெற்றன. இந்த முகாமில் 384 பசுக்களும், 575 வெள்ளாடுகளும், 400 கோழிகளும் பயன்பெற்றன. இம்மருத்துவ முகாமில் சினை பிடிக்காத மாடுகளுக்கும், கிடேரிக்கன்றுகளுக்கும் தாது கலவைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும் 10 கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் உதவி இயக்குனர் அரியலூர் மருத்துவர் சொக்கலிங்கம், கால்நடை ஆய்வாளர் செல்வராணி, கால்நடை உதவி மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்."
- விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
- மகா தீபாராதனை நடைபெற்றது.
அரியலூர்
தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. பைரவாஷ்டமியை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடுக பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, நெல்லி, முள்ளிப்பொடி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள், பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தனர். பின்னர் பைரவருக்கு ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன. மங்கள ஆரத்தி நடைபெற்றது. பைரவருக்கு சிவபுராணம் பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
- போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
- வெற்றி இலக்கை எளிதில் அடைவதற்கு
அரியலூர்:
என்றார் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான (எஸ்.எஸ்.சி) இலவச பயிற்சியை திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன் தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது,
போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராக செல்வதற்காக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால் தான் போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றிப் பெற முடியும்.
போட்டித் தேர்வில் பங்கு கொள்வது உங்கள் இலக்கு அல்ல, அதில் வெற்றி பெறுவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் சமுதாயத்திற்கானது. புத்தகத்தை கையில் வைத்து படிப்பது முக்கியம் இல்லை, படிப்பதை மனதிற்குள் எடுத்துக் கொள்வது தான் முக்கியம். தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டால வெற்றி என்ற இலக்கை எளிதில் அடையலாம் என்றார். பின்னர் டிஎன்பிஎஸ்சி, பிளஸ்-2 தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.






