என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை அருகே வாலிபரை கடத்தி கொன்று தீ வைத்து எரிக்க முயற்சி- போலீசார் விசாரணை
    X

    செந்துறை அருகே வாலிபரை கடத்தி கொன்று தீ வைத்து எரிக்க முயற்சி- போலீசார் விசாரணை

    • இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
    • சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரங்களில் ஏராளமான மதுபிரியர்கள் பல்வேறு இடங்களில் இருந்து படையெடுத்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை ஆய்வு செய்தனர்.

    அப்போது யாரோ மர்மநபர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்து இந்த பகுதிக்கு கொண்டு எரிக்க முயற்சி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    இறந்து கிடந்தவரின் சட்டை பகுதி எரிந்த நிலையில் இருந்தது. எனவே கொலை செய்தவர்கள் அதனை மறைப்பதற்காக கொலையுண்ட நபரின் உடலை எரிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது உறுதியானது. மேலும் அவரது கைகள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களையும் அதிரடியாக திரட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×