என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் ஷீலா(வயது 22). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி காலை மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் தங்கராசு இதுகுறித்து தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மருத்துவமனை டீன் நோயாளி, உடன் வந்தவர்களுக்கு அறிவுறுத்தல்

    அரியலூர்,

    நாட்டில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் டாக்டர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் உடன் வந்தவர்களில் பலர் முக கவசம் அணிந்து வந்தனர். சிலர் முக கவசம் அணியவில்லை. கட்டாயம் முககவசம் அணிந்தால் மட்டுமே நோய் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனையின் டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கு என்று குற்றச்சாட்டு

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை மறைத்து விளம்பர போர்டுகள் மற்றும் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் சில காலங்கள் விளம்பர போர்டுகள் வைக்கப்படாத நிலையில், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கினால் மீண்டும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.பேனர்கள் வைக்கப்பட்டு சிலை முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது குறித்து பாமக நகர செயலாளர் இ.பரசுராமன் அரசு அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு புதிதாக தண்ணீர் பந்தல் திறக்க கொட்டகை அமைக்கப்பட்டது.இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெகநாத் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணியகோடி உள்ளிட்ட போலீசார், கொட்டகையை அகற்றியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த, விளம்பர பேனர்களையும் அகற்றினர். 

    • கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் மன உளைச்சல்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    உடையார்பாளையம், 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீரமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி ஜெயக்கொடி(55). இவர்களது மகள் திவ்யா(25). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடையார்பாளையம் கைகல நாட்டார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, பவின்ராஜ்(7) என்ற மகன் உள்ளார். திவ்யாவின் கணவர் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் திவ்யா மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தனது வீட்டில் இருந்த போது மண்ணெண்ணெய் தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் காயமடைந்த திவ்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிளில்் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து பலியானார்
    • இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் முருகேசன் (வயது50). இவர் சாத்தம்பாடி ஊராட்சியில் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாத்தம்பாடி ஊராட்சியில் பணி முடித்துவிட்டு வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வீடான சிலால் கிராமத்திற்கு செல்வதற்காக தா.பழூர்- ஜெயங்கொண்டம் சாலை யில் சென்று கொண்டி ருந்தார். அப்போது கோடங்குடி அருகே வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதில் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குஅவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




    தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மன் வீதி உலாவும், இரவில் அரிச்சந்திரா நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். அப்போது அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பினர். விழாவில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    ஆண்டிமடம் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த கூவத்தூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (60). இவர் ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் கூவத்தூர் பகுதியில் சாலையைக் கடக்க முற்பட்டபோது நெய்வேலியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வேகமாக சென்ற சசிகுமார் என்பவர் ஓட்டி வந்த கார் கணேசன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார் இரண்டும் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் சசிகுமாரை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்




    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலியானார்
    • இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (35).இளநீர் வியாபாரியான இவர் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் இளநீர் வாங்கி விற்பனை செய்து வந்தார். இன்று ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரங்களில் இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    எதிர்பாராத விதமாக தவறி விழுந்த இளநீர் வியாபாரி தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடனடியாக இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனசேகரன் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
    • போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையம் முன்பு மற்றும் இராயம்புரம், பொய்யாதநல்லூர், பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர் போன்ற இடங்களில் மது விலக்கு ஆயதீர்வை துறை சார்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மதுவிலக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓசைக்கலைக்குழுவினர் பங்கேற்று மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் கலால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் பேருந்து நிலையம் மற்றும் அண்ணாநகர் பிரிவு சாலையிலும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    • கொரோனாவுக்கு 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 54 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது"

    • வைத்தியநாதசுவாமி கோவிலில் நந்தியம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப் பெற்றதுமான தலமாகும். இங்கு வியாக்ர பரத முனிவரின் மகள் சுயசாம்பிகை தேவியருக்கும், சிலால் முனிவரின் மகன் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருமண நிகழ்ச்சியையொட்டி நேற்று மாலை கோவில் முன்பு உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும், நந்தியம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன், கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியம்பெருமான் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் நடந்தது.

    தொடர்ந்து, மணமக்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர். பின்னர், நந்தியம்பெருமானும், சுயசாம்பிகை தேவியாரும் மணக்கோலத்தில் கண்ணாடி பல்லக்கில் அமர்ந்து திருமழபாடி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்லும் வகையில் அரியலூர், தஞ்சாவூர், திருமானூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • பதவி உயர்வு வழங்க கோரி

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரியலூரிலுள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 9 ஆண்டுகளாக காத்திருக்கும் கிரேடு2 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தொகுப்பூதிய பணியாள ர்களை, பணி நிர ந்தரம் செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை ரத்து  செய்ய வேண்டும்.341 அரசாணை யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறு த்தப்பட்டது. ஆர்ப்பா ட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வகீல் தலைமை தாங்கினார். மாநிலச்செ யலர் ராஜா கோரிக்கை விளக்கவு ரையாற்றினார். மாவட்டச் செயலளார் சரவ ணகுமார், பொரு ளாளர் அருண்பி ரகாஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர்.

    ×