என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- பதவி உயர்வு வழங்க கோரி
அரியலூர்:
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரியலூரிலுள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 9 ஆண்டுகளாக காத்திருக்கும் கிரேடு2 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தொகுப்பூதிய பணியாள ர்களை, பணி நிர ந்தரம் செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்.341 அரசாணை யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறு த்தப்பட்டது. ஆர்ப்பா ட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வகீல் தலைமை தாங்கினார். மாநிலச்செ யலர் ராஜா கோரிக்கை விளக்கவு ரையாற்றினார். மாவட்டச் செயலளார் சரவ ணகுமார், பொரு ளாளர் அருண்பி ரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர்.
Next Story






